KS Associates , Gobichettipalayam

KS Associates , Gobichettipalayam Lisensed Building Surveyor (LBS), consulting and construction, Digital Land surveying .

முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய வட்ட கணக்குகள்!                                             ஒரு இடம் சம்பந்தமாக அனைத்த...
30/07/2025

முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய வட்ட கணக்குகள்!
ஒரு இடம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் கணக்குகளின் மூலம் நமக்கு கிடைக்கும் , அவையே போதுமானதாக இருக்கும். அதுவே பெரிய அளவில் நில சிக்கல்கள், பழைய கணக்குகளை எல்லாம் தேடி ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள தேவைபட்டால் வட்ட கணக்குகளையும் பார்வையிட வேண்டி இருக்கிறது. அதனால் ஓரளவாவது வட்ட கணக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

A -பதிவேடு ; இப்பதிவேடு இரண்டு பிரதிகள் இருக்கும் , ஒன்று கிராம கணக்கில் இருக்கும். அ –பதிவேடு மற்றொன்று வட்டத்திலும் இருக்கின்ற அ-பதிவேடு இப்பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் புல எண், உட்பிரிவு மாறுதல்கள் , நில ஒப்படைப்பு , நிலமாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும் VAO பிரதியிலும் வட்டாட்சியர்அவர்களால் பதியபட வேண்டும்.

B – பதிவேடு; தற்போது பராமரிக்க படவில்லை என்றாலும், பழைய எஸ்டேட் இனாம் நிலங்கள் பற்றிய கணக்குகள் , இதில் இருக்கும் நில விவரங்கள் எல்லாம் தற்போது ரயத்துவாரியாக மாறி விட்டு இருக்கும், மேலும் 1963 க்கு முன் கிராமகணக்கில் நிலங்கள் என்னவாய் இருந்தது என்று அறிய B – பதிவேடு உதவும்.

B1 – பதிவேடு: தேவதாசிகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் விவரங்கள் , ஜாமீன் சமய கொடைகள், அறகொடைகள், கிராம பணி கொடைகள் மற்றும் பலவிதமான கொடைகள் இதில் இருக்கும்.

C – பதிவேடு: குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களை பற்றிய பதிவேடு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

D– பதிவேடு : தாழ்த்தப்பட்ட மக்கள் & பழங்குடியினர் ஏழைகளுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களை பதியும் பதிவேடு

F – பதிவேடு: (LAND ALINATION) நில உரிமையை அரசின் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு மாற்றி இருக்கும் பதிவேடு ஆகும்.

G – பதிவேடு: வாரிசுதாரர்கள் யாரும் இல்லாமல் அரசுக்கே திரும்பி வந்து விடும் நில விவரங்களை காட்டும் பதிவேடு. இன்னும் நிறைய கணக்குகளை வட்டங்களில் பராமரிகின்றனர் .

ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான கணக்குகள் இவைகள் மட்டும் ஒரு மன வரைபடமாக ( MIND MAP) மனதில் வைத்து இருந்தால் போதுமானது.

ASSOCIATES
Digital Land Surveyor
Panneerselvam
#9080953619

  ASSOCIATES  Digital Land Surveyor    type of survey work   type of territory KS Associates , Gobichettipalayam Er Pann...
18/07/2025

ASSOCIATES
Digital Land Surveyor

type of survey work
type of territory KS Associates , Gobichettipalayam Er Panneerselvam K

  ASSOCIATES   Digital Land Surveyor  #9080953619
04/06/2025

ASSOCIATES
Digital Land Surveyor
#9080953619

  breeze resort survey   Associates, Iduhatty, ooty #9080953619  Land Surveying   Surveyor
12/05/2025

breeze resort survey
Associates, Iduhatty, ooty
#9080953619
Land Surveying
Surveyor

09/05/2025
  Government approved   Land Surveyor  #9080953619
09/05/2025

Government approved
Land Surveyor
#9080953619

19/04/2025

*கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ )* *V.A.O வின் பணிகள் என்னஎன்பதை*
*தெரிந்துகொள்வோமா*

*கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது*

1.நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள்,

2.பிறப்பு மற்றும் இறப்பு பதிவு,

3.சாதிச் சான்று,

4.வருமானச் சான்று,

5.இருப்பிடச் சான்று விநியோகம்,

6.விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை,

7.புயல்,

8.மழை,

9.வெள்ளம்,

போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்..

கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

*பணிகள்*

1. பட்டா பெயர் மாற்றுதல்.

2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.

3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.

4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.

5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.

6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.

7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.

8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.

9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.

10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.

11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.

12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.

13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.

14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.

15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.

16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.

17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.

18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.

19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.

20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.

21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.

22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.

23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.

24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.

25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.

இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

29/03/2025

*கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய கிராம கணக்கு என்றால் என்ன*
👇👇👇👇👇👇👇👇👇👇👇

தமிழகத்தை பொறுத்த வரை நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே பத்திரபதிவு அலுவலகம் வட்டாசியர் அலுவலகம் தான் என்று பெரும்பாலான மக்கள் மனதில் நினைவுக்கு வருகிறது.

ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் என்றாலே முதலில் எந்த ஒரு மக்களுக்கும நினைவுக்கு வர வேண்டிய அலுவலகம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகளாக பல அரசுகளால் பல முடிசூடா மன்னர்களின் ராஜ்ஜியங்களால் இஸ்லாமிய பேரரசுகளால்,ஆங்கிலேயர் ஏகாதிபத்தித்தால் நமது தமிழக மண் ஆளப்பட்டு பல்வேறு தரப்பினர்களுக்கு பல்வேறு வகையில் உரிமையாகி இந்த நிலங்கள் ஆளப்பட்டு வந்தது.

ஆனால் 1980 களில் மேற்படி நிலங்கள் எல்லாம் இறுதியாக யார் கையில் இருக்கிறதா இதனை விரிவாக தொகுத்து நில உடைமை மேம்பட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி இந்த ஆவணங்கள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலர் மூலம் பாரமரித்து சரிபார்த்து பாதுகாத்து வருகின்றனர்.

உதாரணமாக வங்கிகளில் கணினி (அ) கம்ப்யூட்டர் காலத்திற்கு முன் கம்ப்யூட்டர் காலத்திற்கு பின் என்று அனைத்து MANUAL ரெகார்டுகளையும் சரிபார்த்து அதனை இறுதி மற்றும் சரியான தகவல்களை கம்ப்யூட்டரில் ஏற்றி வைப்பார்கள்.

அதன் பிறகு வருகின்ற எல்லா அலுவகங்களில் வேலைகளும் மேற்படி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவார்கள் .

அதே போல் தான் நில உடைமை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு இருகின்ற அனைத்து ஆவணங்களையும் ஒழுங்குப் படுத்தி சீர் செய்து அதனை இறுதி ஆவணமாக அதாவது –

யு . டி .ஆர் நில உடைமை மேம்பாட்டு திட்ட ஆவணமாக உருவாக்கி நடைமுறையில் கிராம நிர்வாக அலுவலகம் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்படி கிராம நிர்வாக அலுவலகங்களில் கிராம கணக்குள் 24 இருக்கிறது.

இதை 28 லச்சராக பிரித்து உள்ளது. இந்த 24ம் தெரிந்தால் ஓட்டு மொத்த தமிழகத்தின் நில நிர்வாகம் பற்றி புரிந்து விடும்.

*அந்த 24 கிராம கணக்குள் பற்றி விளக்கம் பின்வருமாறு*

வ.எண்.1. கிராம கணக்குள்.எண். அ. பதிவேடு.

வ.எண்.2. கிராம கணக்கு எண்.1 (சாகுபடி பற்றியது)

வ.எண்.3. கிராம கணக்கு எண்.1A (அறுவடை பற்றியது)

வ.எண்.4. கிராம கணக்கு எண்.2 (அடங்கல் பற்றியது)

வ.எண்.5. கிராம கணக்கு எண்.2C (மரங்களை பற்றியது)

வ.எண்.6. கிராம கணக்கு எண்.2D (பாசன வசதிகளை பற்றியது)

வ.எண்.7. கிராம கணக்கு எண்.2F (கிராம தரிசு நிலங்களை பற்றியது)

வ.எண்.8. கிராம கணக்கு எண்.3 (பட்டா பற்றியது

வ.எண்.9. கிராம கணக்கு எண்.3A (பட்டா மற்றிதல் பற்றியது)

வ.எண்.10. கிராம கணக்கு எண். 4 (நில கழிவுகள் பற்றியது)

வ.எண்.11. கிராம கணக்கு எண் 5 (நில வரி பற்றியது)

வ.எண்.12. கிராம கணக்கு எண் 6 (தண்ணீர் தீர்வை பற்றியது)

வ.எண்.13. கிராம கணக்கு எண் 7 (நில ஆக்கிரமிப்பு பற்றியது)

வ.எண்.14. கிராம கணக்கு எண் 8 (நீர் பாசன நிலங்களில் கிடைக்க கூடிய மொத்த வருவாய் பற்றியது )

வ.எண்.15. கிராம கணக்கு எண் 9 (நீர் பாசனம் பற்றியது)

வ.எண்.16. கிராம கணக்கு எண் 10 ( சிட்டா பற்றியது)

வ.எண்.17. கிராம கணக்கு எண் 11 (பட்டா வடிவம்பற்றியது)

வ.எண்.18. கிராம கணக்கு எண் 12 (நில தொகை பற்றியது)

வ.எண்.19. கிராம கணக்கு எண் 13 (தினசரி வசூல் பற்றியது)

வ.எண்.20. கிராம கணக்கு எண் 14 (அபராத தொகை பற்றியது)

வ.எண்.21. கிராம கணக்கு எண் 15 ( அரசு கருவுல பணம் செலுத்தும் விபரம் பற்றியது)

வ.எண்.22. கிராம கணக்கு எண் 16 (நிலுவை தொகை பற்றியது)

வ.எண்.23. கிராம கணக்கு எண் 17 (தண்ட தொகை பற்றியது)

வ.எண்.24. கிராம கணக்கு எண் 18 (ரசீது சம்பந்தப்பட்டது)

வ.எண்.25. கிராம கணக்கு எண் 19 (பிறப்பி இறப்பு சம்பந்தப்பட்டது)

வ.எண்.26. கிராம கணக்கு எண் 2௦ (மலை பற்றிய விவரம்)

வ.எண்.27. கிராம கணக்கு எண் 21 (கால் நடை பற்றியது )

வ.எண்.28 கிராம கணக்கு எண் 22 (கூட்டு பட்டா பற்றியது)

மேற்ண்ட 28 லெட்ஜரை சில கணிணி மயமான பிறகு அரசு பராமரிக்க வேண்டாம் என அறிவித்துள்ளது…அவை பின்வருமாறு

சாகுபடி(Cultivation) பற்றிய மாதாந்திர பதிவேடு (Monthly Register) அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக்கை நீக்கலாம்

1.ஏ சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டி. அடங்கல் பதிவேட்டின கணினி மயம உடன் இக்கணக் நீக்கலாம்.

2டி. கிராமத்தில் சில பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் பாய்ச்சப்பட்ட பரப்பில் விவரங்களை காட்டும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2 இலும் ம “அ”பதிவேட்டில் சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

2எப். கிராமத்தில் பல்வேறு வகை நில வகுப்புகளின் பரப்புகளைக் காண்பிக்கும் விவரப்பட்டி இக்கணக்குக விவரங்கள் க எண் 2இலும் ம “அ”பதிவேட்ட சேகரிக்கக் படுவதினால் நீக்கலாம்.

4அனைத்து வகை அரசிறைக்கழிவுகளைக் காட்டும் விவரப்படி. அத்தகைய அர சிறைகழிவுகள் தற்சமயம் கிராமங்களி செய்யப்படுவதால் எனவே நீக்கலாம்

8 ஏ. I மற்றும் II -|||ஆம் வகுப்பு நீர்ப்பாய்ச்சல் ஆதாரங்களின் கீழ் நீர்ப்பாய்ச்சப்பட்ட நிலங்களைக் காண்பிக்கும் விவரப்படி. இக்கணக்கு “அ” பதிவேட்ட காணப்படுவ இதனை நீக்கலாம்

10சி மற்றும் 10டி. வருவாய் பதிவுகளை மாற்றுவதற்காக (Transfer of Registry) கிராம நிர்வாக அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டு வரும் துணைப் பதிவேடு (Subsidiary Register) கிராம கணக்கில் இதன் விவரம் பெறப்படுவதால் இவைகள் நீக்கப்படுகின்றது

பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையைக் காட்டும் விவரப்பட்டி. இக்கணக்கு, க எண்10(1) கணக்கைசேர்த்து பேண ஆணையிடப்பட்டதால் நீக்கப்படுகிறது.

08/03/2025

# Womens are pillars of family....

Address

Gobichettipalayam, Erode, Idhuhatti
Nilgiris
638452

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919080953619

Website

Alerts

Be the first to know and let us send you an email when KS Associates , Gobichettipalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KS Associates , Gobichettipalayam:

Share

Category