Power Hands - Eastern Region

Power Hands - Eastern Region No.415B, New Kalmunai Road, Ward No. 18, Navatkudah, Batticaloa

No.396, Batticaloa Road, Pandiruppu-2, Kalmunai

07/09/2026

மதிப்பிற்குரிய முதலீட்டாளர்களே,

எங்கள் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்த உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2019ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக உங்களது முதலீட்டிற்கான இலாபங்களை உரிய காலப்பகுதியில் கிரமமான முறையில் வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துவந்துள்ளோம்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலைக்கு மூன்று முக்கிய காரணங்களை நாங்கள் இனங் கண்டுள்ளோம்.

முதலாவதாக, 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மாதத்தில்) நாம் எடுத்த தீர்மானத்திற்கு அமைய, ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் வருடாந்த வருமான இலாப சதவீதத்தை 18% ஆகக் குறைத்திருந்தோம். இதன் மூலம் நமது வாடிக்கையாளர்களின் முதலீடுகளைப் பாதுகாப்பதே நமது நோக்கமாக இருந்தது. அந்தத் தீர்மானத்தின் காரணமாக, நமது போட்டி நிறுவனங்கள் நமது சில விற்பனைப் பிரதிநிதிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் அதிக சலுகைகளையும், இலாபங்களையும் வழங்கி, அவர்களைத் தம்பக்கம் ஈர்த்துக் கொண்டனர்.

இரண்டாவதாக, 'விவசாயத்திற்கு முதலீடு செய்வது சட்டவிரோதமானது' என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் மற்றும் வெளியிடப்பட்ட பல்வேறு அறிக்கைகள் காரணமாக, நமது வாடிக்கையாளர்கள் அச்சமடைந்து அமைதியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மூன்றாவதாக, சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர்கள் Facebook மற்றும் YouTube இல் பார்வைகளை (views) மற்றும் தமது பிரபலத்தை அதிகரிப்பதற்காக நமது நிறுவனப் பெயரையும், எமது வாடிக்கையாளர்களையும் பயன்படுத்தியதைக் காண முடிந்தது.

இந்த மூன்று தரப்பினருக்குமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நமது வாடிக்கையாளர்களின் பணத்தைப் பாதுகாக்கும் எண்ணம் சிறிதேனும் இல்லை என்பது நமக்குத் தெளிவாகிறது. அவர்கள் இந்தச் சிக்கலைச் சீராக்க விரும்பவில்லை என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. எமது பணிப்பாளர் சபை மற்றும் நிர்வாகத்தை மோசடிக்காரர்களாகச் சித்தரித்து நீதிமன்ற நடவடிக்கைக்கே கொண்டு செல்ல அவர்கள் விரும்புகின்றனர்.
சமூகத் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு நன்றாகவே தெரியும்—நீதிமன்ற நடவடிக்கை மூலம் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்குப் பல ஆண்டுகள் ஆகும்.

எனவே, நமது வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் செயற்படவுள்ளதுடன், நமது வாடிக்கையாளர்களை ஏமாற்றும், பிழையான கருத்துக்களைப் பகிர்ந்து வரும் அனைவருக்கும் எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்க்கிறோம்.

சமூகச் செயல்பாட்டாளர்கள் சிலர் நம் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், நமது அனைத்து விவசாய மற்றும் ஏனைய திட்டங்களை (Projects) நேரில் பார்வையிடுமாறு அவர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அழைப்பு விடுத்திருந்தோம். அதை ஏற்று சில சமூகச் செயல்பாட்டாளர்கள் எமது விவசாய நிலங்களையும், திட்டங்களையும் பார்வையிட வருகை தந்தனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.

அதேவேளை, Facebook ஊடகம் வழியாக நமது உத்தியோகபூர்வ இலாஞ்சினை (Logo) மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி, பெயர் குறிப்பிடாத நபர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருவதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் அனைவருக்கும் எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பவர் ஹென்ட்ஸ் பிளாண்டேஷன் நிறுவனம் உங்களது முதலீட்டைப் பாதுகாப்பதற்காக தற்போது சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காகவே சிறப்பாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன:

அக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாகவும் முறைப்படியும் மாதாந்த வருமான இலாபத்தை வழங்கி வருவதற்குப் பொறுப்புடன் செயற்படுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகஸ்ட் மாதத்திற்கான நிலுவைத் தொகை மற்றும் செப்டம்பர் மாதத்திற்குரிய இலாபங்களை எதிர்காலத்தில் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உங்களது முதலீட்டுகளைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதுவரை பொறுமையுடன் நம் மீது நம்பிக்கை வைத்து, Power Hands Plantation நிறுவனத்தை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர ஒத்துழைப்பு வழங்கி காத்திருக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேவேளை, இந்தத் தீர்மானத்தால் உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இருப்பினும், உங்களது முதலீட்டைப் பாதுகாத்து, வழமை போல பொறுப்புடன் உங்களது மாதாந்த வருமானத்தை தொடந்தும் நீண்ட காலத்திற்கு முறைப்படி வழங்குவோம் என நம்புறுத்துகிறோம்.
மீண்டும் ஒருமுறை உங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவிடுகிறோம்.

நன்றி.

30/08/2026

රුදුරු විපතින්
නේපාලයේ ජන හදවත් වල ඇවිලුණු දුක් ගින්දර
ඉක්මණින් නිවේවා !
නැවත ජාතියක් ලෙස නැගිටින්නට
ඔවුන් සැමට ශක්තිය , ධෛර්ය ලැබේවා ! 🙏🤍

🙏🇳🇵

28/08/2026
Ceycell extends its heartfelt condolences to all those affected by the devastating floods in Nepal.Our thoughts and pray...
27/08/2026

Ceycell extends its heartfelt condolences to all those affected by the devastating floods in Nepal.

Our thoughts and prayers are with the families who have lost their loved ones, those who have been injured, and everyone facing hardship during this difficult time.

May the affected communities find strength, courage, and hope as they recover and rebuild.

With deepest sympathy and solidarity from Ceycell. 🇳🇵❤️

ඔබ සැමට පිංබර නිකිණි පොහොය දිනයක් වේවා! ආනන්ද හිමියන් රහත් බාවයට පත් වීම, පෙර වස් එළඹීම, පලමු ධර්ම සංගායනාව පැවැත්වීම, ව...
27/08/2026

ඔබ සැමට පිංබර නිකිණි පොහොය දිනයක් වේවා!
ආනන්ද හිමියන් රහත් බාවයට පත් වීම, පෙර වස් එළඹීම, පලමු ධර්ම සංගායනාව පැවැත්වීම, වැනි ශාසනික කටයුතු රැසක් මෙන්ම මහනුවර ශ්‍රී දළඳා මාලිගාවේ ඇසළ පෙරහර මංගල්‍යයේ අවසන් රන්දෝළි පෙරහර පැවැත්වෙන්නේද උතුම් නිකිණි පසළොස්වක පොහෝ දිනයි.. 🌸

27/08/2026

පින්බර නිකිණි පෝය දිනයක් වේවා!
ඔබගේ සියලු යහපත් පැතුම් ඉටුවී, සාමය, සතුට, සෞභාග්‍යය සහ ආශීර්වාදයෙන් පිරි සුන්දර දිවියක් උදා වේවා!

27/08/2026

May this Nikini Full Moon Poya Day inspire peace in our minds, wisdom in our thoughts, and compassion in our hearts.

As we reflect on the significance of the First Buddhist Council and the attainment of Arahatship by Ven. Ananda Thero, may we continue to preserve the Dhamma and walk the path with mindfulness and clarity.

Wishing you and your loved ones a peaceful and blessed Nikini Poya Day. 🌿

27/08/2026

පින්බර නිකිණි පෝය දිනයක් වේවා!

ඔබගේ සියලු යහපත් පැතුම් ඉටුවී, සාමය, සතුට, සෞභාග්‍යය සහ ආශීර්වාදයෙන් පිරි සුන්දර දිවියක් උදා වේවා!

Address

Batticaloa

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Friday 08:30 - 17:00

Telephone

+94707605612

Alerts

Be the first to know and let us send you an email when Power Hands - Eastern Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Power Hands - Eastern Region:

Shortcuts

Share

Category