02/04/2026
குவைத் மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..
குவைத் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம்: மனிதவள அதிகாரசபை தீவிர கண்காணிப்பில் உள்ளது..
குவைத்தில் தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள விநியோகத்தை தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மனிதவள அதிகாரசபை (Public Authority for Manpower) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு (Expatriates) சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்வார்கள்.
தற்போதைய உள்ளூர் சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, சம்பளம் வழங்காமல் இருப்பது அல்லது நிர்ணயிக்கப்பட்ட தேதியைத் தாண்டி தாமதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தை உள்ளூர் வங்கிகளில் டெபாசிட் செய்யாத நிறுவனங்களின் கோப்புகள் (Files) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் (Suspend) என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சம்பள நிலுவையின்றி இருப்பதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறும் நிறுவனங்கள் அரசு சேவைகளைப் பெறுவதில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
குவைத் தமிழ் சோசியல் மீடியா