STR VOICE தேடலின் குரல்

STR VOICE தேடலின் குரல் Social work and public content vlogs

🌿 இன்றைய சிந்தனை 🌿> “ #அடக்கம்  #அமரருள்  #உய்க்கும்  #அடங்காமை #ஆரிருள்  #உய்த்து  #விடும்.”💭 சிந்தனை:அடக்கம் மனிதனை உய...
17/09/2026

🌿 இன்றைய சிந்தனை 🌿

> “ #அடக்கம் #அமரருள் #உய்க்கும் #அடங்காமை
#ஆரிருள் #உய்த்து #விடும்.”

💭 சிந்தனை:
அடக்கம் மனிதனை உயர்த்தும்;
அடங்காமை அவனை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

✍️ MHM ASREEN
📢 STR VOICE – தேடலின் குரல்

16/09/2026

🌱 விடா முயற்சி… வெற்றி நிச்சயம்! 🌱

விழுந்தாலும் எழுந்து நட…
வழி இல்லையெனில் வழியை உருவாக்கு…
தோல்வி வந்தாலும் துவண்டு விடாதே…
உன் முயற்சியை மட்டும் ஒருபோதும் கைவிடாதே…!

⏳ இன்று சிரமமாக இருக்கலாம்,
🌅 நாளை அதுவே வெற்றியாக மாறலாம்.

விடா முயற்சி இருக்கும் இடத்தில்,
வெற்றி நிச்சயம்! 💪✨

✍️ MHM ASREEN
🎙️ STR VOICE – தேடலின் குரல்

🌿 இன்றைய கவிதை 🌿காலம் கற்றுத் தந்த பாடங்கள்வார்த்தைகளால் சொல்ல முடியாது…சில காயங்கள் வலியாக இருந்தாலும்,அவை நம்மை வலிமைய...
15/09/2026

🌿 இன்றைய கவிதை 🌿

காலம் கற்றுத் தந்த பாடங்கள்
வார்த்தைகளால் சொல்ல முடியாது…
சில காயங்கள் வலியாக இருந்தாலும்,
அவை நம்மை வலிமையாக்குகின்றன…

நம்மை விட்டு விலகியவர்களை
தேடி ஓட வேண்டியதில்லை…
நம்முடன் உண்மையாக இருப்பவர்களை
மதித்து வாழ்ந்தாலே போதும்… 🤍

வாழ்க்கை என்பது
யார் நம்முடன் இருந்தார்கள் என்பதல்ல,
யார் இல்லாதபோதும்
நாம் எப்படி எழுந்து நின்றோம் என்பதே! ✨

— ✍️ MHM ASREEN

🔊 STR VOICE – தேடலின் குரல்

15/09/2026

🌙 இன்றைய சிறிய உபதேசம் 🤲

வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எத்தனையோ சோதனைகள் வந்தாலும், அல்லாஹ்வின் அருளையும் பாதுகாப்பையும் ஒருபோதும் மறந்து விடாதோம்.

நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் ஒவ்வொரு பாவத்திலிருந்தும் விலகி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு வாழ்வோம்.
உண்மையான பாதுகாப்பு அல்லாஹ்விடமே உள்ளது. 🤍

🤲 சிறிய துஆ:
“யா அல்லாஹ்! நாங்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னிப்பாயாக. அனைத்து தீமைகள், சோதனைகள் மற்றும் வழிதவறுதல்களிலிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக. எங்கள் உள்ளங்களை நேர்வழியில் நிலைத்திருக்கச் செய்வாயாக. ஆமீன்.” 🤲

அல்லாஹ் நம் அனைவரையும் எல்லா விதமான பாவங்களிலிருந்தும் பாதுகாத்து, நேர்வழியில் வாழ அருள் புரிவானாக. ஆமீன். 🤍

🌿 இன்றைய கவிதை 🌿வாழ்க்கை எப்போதும்நாம் நினைத்தபடி நகராது…சில பாதைகள் வலியைக் கொடுக்கும்,சில மனிதர்கள் பாடம் கற்பிப்பார்க...
12/09/2026

🌿 இன்றைய கவிதை 🌿

வாழ்க்கை எப்போதும்
நாம் நினைத்தபடி நகராது…

சில பாதைகள் வலியைக் கொடுக்கும்,
சில மனிதர்கள் பாடம் கற்பிப்பார்கள்,
சில தோல்விகள் நம்மை
வலிமையானவர்களாக மாற்றும்…

எதுவாக இருந்தாலும்
நின்றுவிடாதே…
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
மீண்டும் நட…

ஏனெனில்,
இன்று உன்னை சோதிக்கும் வாழ்க்கையே
நாளை உன் வெற்றிக்கு
காரணமாக இருக்கும்! 🌸

✍️ MHM ASREEN
STR VOICE – தேடலின் குரல்

#இன்றையகவிதை #வாழ்க்கை #முயற்சி #வெற்றி

12/09/2026

Nothing to explain
இன்றைய கவிதை 🌿

எவ்வளவு வலி இருந்தாலும்…
தனியாகவே அழுது தீர்த்து,
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு,
மீண்டும் நம்மை நாமே
புதுப்பித்துக் கொள்வது…

அதுவும் ஒரு வகை காதல்தான்… ❤️

யாரும் புரிந்துகொள்ளாத நேரத்தில்
நம்மை நாமே புரிந்துகொள்வது,
யாரும் துணையில்லாத நேரத்தில்
நமக்கே நாமே துணையாக நிற்பது…

வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும்
அழகான பாடம் அது. ✨


STR VOICE – தேடலின் குரல்
✍️ MHM ASREEN

🌿 இன்றைய கவிதை 🌿வாழ்க்கை ஒரு அழகான பயணம்…சில பாதைகள் பூக்களைத் தரும்,சில பாதைகள் காயங்களைத் தரும்…ஆனால்,காயங்கள் கற்றுத்...
11/09/2026

🌿 இன்றைய கவிதை 🌿

வாழ்க்கை ஒரு அழகான பயணம்…
சில பாதைகள் பூக்களைத் தரும்,
சில பாதைகள் காயங்களைத் தரும்…

ஆனால்,
காயங்கள் கற்றுத் தரும் பாடங்களும்,
கண்ணீர் சொல்லித் தரும் உண்மைகளும்
நம்மை இன்னும் வலிமையானவர்களாக மாற்றுகின்றன… ❤️

வீழ்ந்தாலும் எழுந்திடு,
தோற்றாலும் முயன்றிடு,
முடியும் வரை போராடு…
உன் நாளும் ஒருநாள்
அழகாக மலரும்! 🌸

✍️ MHM ASREEN
STR VOICE – தேடலின் குரல்

#இன்றையகவிதை #கவிநயம் #வாழ்க்கை #முயற்சி

🏏 Rawla Sports Club சார்பில் கௌரவிப்புRawla Cricket Team-க்கு அனுசரணை வழங்கி ஆதரவளித்த Ramees Brothers Welding Shop நிறு...
10/09/2026

🏏 Rawla Sports Club சார்பில் கௌரவிப்பு

Rawla Cricket Team-க்கு அனுசரணை வழங்கி ஆதரவளித்த Ramees Brothers Welding Shop நிறுவனத்தின் உரிமையாளர் M. Ramees அவர்களுக்கு, Rawla Sports Club சார்பில் Ajas Mawlavi அவர்களால் கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் (Memento) வழங்கப்பட்டது.

Sammanthurai Police வீதியில் இயங்கி வரும் Ramees Brothers Welding Shop நிறுவனத்தின் உரிமையாளர் M. Ramees அவர்கள், Rawla Cricket Team-க்கு வழங்கிய அனுசரணை மற்றும் ஆதரவுக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும் இளம் வீரர்களின் முன்னேற்றத்திற்கும் தொழில் நிறுவனங்கள் வழங்கும் இத்தகைய ஆதரவுகள் பாராட்டுக்குரியவை.

STR VOICE – தேடலின் குரல் 🏏🏆

🏏 Rawla Sports Club சார்பில் கௌரவிப்புRawla Cricket Team-க்கு அனுசரணை வழங்கி ஆதரவளித்த ABQURAH TRADING IN DECOR & CONTRA...
10/09/2026

🏏 Rawla Sports Club சார்பில் கௌரவிப்பு

Rawla Cricket Team-க்கு அனுசரணை வழங்கி ஆதரவளித்த ABQURAH TRADING IN DECOR & CONTRACTING நிறுவனத்தின் உரிமையாளர் Aasif Ahamed அவர்களுக்கு, Rawla Sports Club சார்பில் கௌரவிக்கும் வகையில் நினைவுச் சின்னம் (Memento) வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கும், இளம் வீரர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் வழங்கப்படும் இத்தகைய ஆதரவுகள் பாராட்டுக்குரியவை.

Rawla Cricket Team-க்கு தனது பங்களிப்பை வழங்கிய Aasif Ahamed அவர்களுக்கு Rawla Sports Club சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன. 🏏🏆

STR VOICE – தேடலின் குரல்

25/05/2026



0757101267
*🌟⭐ * 🌟⭐💫
*உயர்தர சீலிங் வேலைகள் மிகக்குறைந்த விலையில்!*


🔸 * குறைந்த விலையில் நாங்கள் மட்டுமே செய்து தருகிறோம்!*

🏠 ஸ்ரீலங்காவின் எந்த பகுதியிலிருந்தாலும்
✅ உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து சேவையளிக்கிறோம்
✅ நிபுணத்துவம் வாய்ந்த பணியாளர்கள்
✅ தரமான பொருட்கள்
✅ நேரத்தில் பணியமைப்பு
✅ 100% வாடிக்கையாளர் திருப்தி

📞 *தொடர்புக்கு: 0757101267
📍 *STR GYPSUM MOLDING

Address

Sammanthurai
Sammanthurai

Alerts

Be the first to know and let us send you an email when STR VOICE தேடலின் குரல் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category