06/06/2025
இப்போது எம் மத்தியில் பரவலாக உள்ள கேள்வி வீட்டுச் சந்தை நிலவரம் என்ன ? அதன் எதிர்காலம் என்னவாகும் ? என்பதாகவே அமைந்திருக்கும்.🧐
வீட்டுச் சந்தை நிலவரம் என்பது பெரும்பாலனவர்கள் மத்தியில் மிக முக்கியமான கரிசனையாக மாறியுள்ளது.
அதற்கு காரணம் எமது வாழ்வின் மிக முக்கியமான ஒரு அங்கமாக நாம் வாழும் வீடு என்பதை காணப்படுகின்றது. 🏠
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத் தேவையினை பூர்த்தி செய்யும் ஒன்று என்பதை தாண்டி அது எமது வாழ்வின் மிக முக்கிய பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக மாறிப் போயுள்ளது.
பொதுவாக எமது வருமானத்தின் 30 சதவீதத்தை எமது இருப்பிடத் தேவைக்காக நாம் பயன்படுத்துவதே சிறந்தது என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதாவது வருடாந்தம் ஒரு இலட்சம் டொலர் ($100,000 )வருமானம் பெறும் குடும்பம் ஒன்று தமது இருப்பிடத் தேவைக்கான 2500 டொலர்கள் வரையும் செலவிடலாம் என்பதாக நாம் அதனை விளங்கிக் கொள்ளலாம்.
ஓன்ராறியோக மாகாணத்தை பெறுத்தவரை குடும்பங்களின் சராரி வருமானமாக 95,000 டொலர்கள் காணப்படுகின்றது.
ஓன்ராறியோ மாகணத்தில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டின் சராசரி வாடகை என்பது 23,00 டொலர்களாக காணப்படுகின்றது.
அதேவேளை 80000 டொலர் பெறுமதியான வீடொன்றை கொள்வனவு சொந்தமாக வைத்திருப்பதாயின் ஒரு குடும்பம் அதற்காக சுமால் 3,500 டொலர்களை அடமானக் கடனாக செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன ஒன்று ரொரன்ரோ பெரம்பாகத்தில் வீடுகளின் விலைகளில் காண்படும் கணிசமான அதிகரிப்பு மற்றையது தற்போதுள்ள அடமானக் கடன் வட்டி வீதம்.
வீடுகள் சந்தையில் அதிகமாக உள்ளது, வீடு விற்பனை குறைவடைந்துள்ளது என பலரும் குறைப்பட்டாலும் இவற்றினால் தூண்டப்பட்டு வீடுகளின் விலைகளின் வீழ்ச்சி ஏற்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
வீடுகளை கொள்வனவு செய்வது
ற்கு வீட்டுக் கொள்வனவாளர்கள் கொண்டுள்ள தயக்கம் என்பதே வீட்டுச் சந்தையில் மிகப் பெரிய தாக்கத்தை கொண்டுள்ளது.
வீடுகளை கொள்வனவு செய்வதற்கான பொருளாதார தகமைகளை கொண்டுள்ள பலரும் தமது வீட்டுக் கொள்வனவு நடவடிக்கையினை தாமதப்படுத்தி வருகின்றனர்.
அவர்களிடம் உள்ள ஒருவகையான பயனம் அல்லவது நம்பிக்கையீனம் தான் அவர்களை தாமதப்படுகித்துகின்றது.
அமெரிக்க வரிவிதிப்பினால் தோன்றியுள்ள பொருளாதார தளம்பல் நிலை என்பது வீட்டுச் சந்தையில் நேரடியான தாக்த்தை செலுத்தவில்லை என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் இந்த வரிவிதிப்பினால் கனடாவின் பொருளாதாரம் மிக் பெரிய சரிவினை சந்தித்தால் அதனால் தொழில்வாப்பு இழப்பு ஏற்பட்டால் அதனால் வீட்டு விலைகள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்தால் என பல ஆனால்களின் நீட்டியில் இந்த தயக்கம் அல்லது நம்பிக்கையீனம் உருவாகியிருக்கின்றது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தது போன்ற மிகக் குறைந்த வட்டி வீதத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு உடனடியாக இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறாக இருந்தால் இனி வரும் சில வருடங்களுக்காவது அடமானக் கடன் வட்டி வீதம் சராசரியாக 3 முதல் 4 சதவீதமாகத் தான் இருக்கும் என்பதை வங்கிகள் சுட்டிக்காட்டி வருகின்றன.
இந்த யதார்தத்தை சரியாக புரிந்து கொண்டவர்கள் தற்போதுள்ள சந்தை நிலவரத்தினை தமககு சாதகமனா பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.
குறிப்பாக Downtown Toronto பகுதியில் $600,000 பெறுமதியான தொடர்மாடி மனைகள் அதிகளவில் கொள்வனவாகின்றன.
தொடர்மாடி மனைகளின் விற்பனையில் தோன்றியுள்ள சரிவினை அவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளார்கள்.
கொவிட பெருந்தொற்றின் பின்னர் தோன்றிய Work From Home நிலமைகள் மாற்றமடையத் தொடங்கியுள்ளன
பல நிறுவனங்கள் தமது பணியாளர்ளை மீள அலுவலகங்களுக்கு அழைக்கத் தொடங்கியுள்ளன.
இதளால் சில மாதங்களில் Downtown Toronto வில் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கும் அதன் போது குறைந்த விலைக்கு கொள்வனவு செய்த தொடர்மாடி மனைகளை சிறந்த வாடகைக்கு கொடுக்க கூடிய நிலை ஏந்படும் என்பத அவர்களின் கணிப்பு.
மறுபுறம் கொவிட் பெருந்தொற்றின் பின்னர் ஏற்பட்ட சடுதியான வீட்டுச் சந்தை மாற்றங்களின் போது அதிக விலை கொடுத்து ஒன்றுக் மேற்பட்ட வீடுகளை கொள்வனவு செய்த முதலீட்டமாளர்கள் அவற்றை மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
கூடுதல் விலைக்கு கொள்வனவு செய்த முதலீட்டுக்கான வீடுகளை தொடர்ந்து வைத்திருப்பது கடன் சுமையினை அதிகரிக்கும் என்பதோடு அவர்களின் பிரதான இருப்பிடத்தையும் இழக்கும் அபாயத்தை கொண்டுள்ளதால் அவர்கள் அந்த வீடுகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முற்படுகின்றனர்.
இவ்வாறான வீடுகளை கொள்வனவு செய்வதற்கு அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
இந்த வீட்டுச் சந்தை என்பதும் ஒரு பங்கு வணிகம் போன்றது சரியாக கணித்து சிறப்பாக முடிபெவடுத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
உணர்ச்சிகளால் உந்தப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தான நிலைகளையே ஏற்படுத்தும்.
சிந்தியுங்கள் உங்களால் முடியும் என்று நம்பினால் செயல்படுங்கள் ✨
ஏனென்றால் செயல் என்பதே உலகின் தலை சிறந்த சொல்
Ramanan Santhirasegaramoorthy Ramanan Santhirasegaramoorthy is a high-touch Real Estate Representative @ Re/Max Community Realty Inc