ISR TRUST

ISR TRUST Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ISR TRUST, Real Estate, 9A1, south Street, Pothigaiyadai, Papanasam, Ambasamudram.

23/04/2026
08/03/2026

சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை (ISR TRUST) சார்பாக
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ஓய்வறியாது உழைக்கும்
உலகின் ஒளிவிளக்குகளே…
தனக்காக அல்ல,
தன்னைச் சார்ந்தவர்களுக்காக
தன்னலமின்றி வாழும்
மகத்தான மகளிர்களே!

உங்கள் உழைப்பில்
ஒரு குடும்பம் மலர்கிறது,
உங்கள் தியாகத்தில்
ஒரு தலைமுறை உயர்கிறது.
எண்ணற்ற ஆசைகளை
உள்ளத்தில் புதைத்துக் கொண்டு
பிறரின் கனவுகளை
நனவாக்கும் அக்னிச் சிறகுகளே!

நீங்கள் சுமக்கும் பொறுப்பு
ஒரு இல்லத்தின் வலிமை,
நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி.
உங்கள் உழைப்பிற்கு
உரிய பிரதிநிதித்துவமும்,
உங்கள் அர்ப்பணிப்பிற்கு
உரிய அங்கீகாரமும்
இந்த உலகம் வழங்க வேண்டிய
அமோகமான மரியாதை.
வாழ்வில் எட்டாக்கனியாய் தோன்றும்
எல்லா கனவுகளையும்
உங்கள் உறுதியான சிறகுகள்
எட்டிப் பறிக்கட்டும்.

இந்த மகளிர் தினத்தில்
உங்கள் தியாகத்திற்கும்,
உங்கள் வலிமைக்கும்,
உங்கள் அர்ப்பணிப்பிற்கும்
எங்கள் மரியாதை நிறைந்த வணக்கங்கள்.

அக்னிச் சிறகுகள் போன்ற
அனைத்து மகளிருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
ஷாஜி ஸ்டீபன் Founder
சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை
(International Social Reconciliation Trust – ISR Trust)

குருவனம் & தமிழ் வனம் அறக்கட்டளை நடத்திய சிலைதிறப்பு, 5000 மரங்கள் வழங்கும் விழா இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அம்பை  க...
11/01/2025

குருவனம் & தமிழ் வனம் அறக்கட்டளை நடத்திய சிலைதிறப்பு, 5000 மரங்கள் வழங்கும் விழா

இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு அம்பை குருவனத்தில் நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவில் விக்கிரமசிங்கபுரம் " தமிழ்வனம்" அறக்கட்டளை சார்பாக இந்த ஆண்டிற்கான 5000 சிறிய மரங்கள் வழங்குவது சார்பான துவக்க நிகழ்வு நடைபெற்றது ...

சிலைகள் திறப்பு & மரங்கள் வழங்கும் விழாவை மாவட்ட ஆட்சியர் மதிப்பிற்குரிய ஐயா. மருத்துவர். K.P. கார்த்திக் கேயன் IAS அவர்கள் துவக்கி வைத்தார்..இவர் தமிழிசை தந்தை ஆபிரகாம் பண்டிதர் சிலையை திறந்து வைத்தார்..

இவ்விழாவிற்கு முன்னிலை வகிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. சிவக்குமார் அவர்கள் சிலையை திறந்து வைத்து 50 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு சிறிய மரங்களை வழங்கினார்...இவர் இந்திய கலை தூதுவர் ஆனந்த குமாரசாமி சிலையை திறந்து வைத்தார்..

இவ்விழாவிற்கு மதுரா கோட்ஸ் ஆலையின் முதல் நிலை அதிகாரியான HR business partner Dr. இன்பராஜ் வருகை தந்து சிலை திறந்து சிறப்புரை ஆற்றினார்..இவர் அக்காலத்தில் நெல்லை பகுதியில் மாபெரும் சமூக சீர்திருத்தங்கள் செய்து கல்வி பணியாற்றிய எமிகார்மல் சிலையை திறந்து வைத்தார். மேலும் PLWA பள்ளியின் தலைமை ஆசிரியை காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் சிலையை திறந்து வைத்தார்..
மேலும் அம்பை காவல்துறையின் DSP திரு. சதிஷ்குமார், விகேபுரம் PLWA பள்ளி தலைமையாசிரியை மீனா, அம்பை அரசு வழக்கறிஞர் காந்திமதிநாதன், யோகிஸ் தியான மைய நிறுவனர் க.ராஜா போன்றோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி ஆயிரக்கணக்கான மரங்களை வழங்கினர் . விழாவில் கலெக்டர் அலுவலக தாசில்தார் செல்வம், அம்பை வட்டாச்சியர், விகேபுரம் PLWA பள்ளி மற்றும் பல்வேறு அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.. மேலும் நெல்லை பள்ளிகளிலுள்ள Eco club மற்றும் பசுமை படையினர் ஆயிரக்கணக்கான மரங்களை பெற்றுக் கொண்டனர்..

தமிழ்வனம் டிரஸ்ட் தலைவர் ஞா. சூர்ய கலா வரவேற்புரை ஆற்றினார்..
குருவனம் நிறுவனர் ஓவியர் சந்ரு அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார். ஒட்டுமொத்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்வனம் அறக்கட்டளை நிறுவனர் இரா. நல்லையா ராஜ் செய்துள்ளார்..
நிகழ்வில் PLWA பள்ளி மாணவர்களின் கைலாய இசை விருந்தும் ஆதி தமிழர் குழுவின் சிலம்பாட்டம் நடைபெற்றது

விழாவின் நான் பங்கேற்று இறுதியாக நன்றி உறை ஆற்றினேன்

17/05/2023

பள்ளி திறக்க இன்னும் 15 நாட்களை உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிகளவில் வருகிறார்கள் ஆனால் அந்த சான்றிதழ்களை விண்ணப்பிக்க என்னென்ன தேவை என்று அறியாமல் உள்ளனார் அதனால் பல தடவை அலைந்து வருகிறார்கள் மக்கள் கஷ்டம் அறிந்து இந்த தகவலை இங்கு என்னென்ன தேவை என பதிவு செய்கிறேன்.

முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

புகைப்படம்
குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)
மதிப்பெண் பட்டியல்(10,12)
ஜாதி,வருமானம் சான்றிதழ்
முதல் பட்டதாரி பத்திரம்
குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய தாத்தா பாட்டி உட்பட கல்வி சான்றிதழ்
தொலைப்பேசி(otp வரும் அதனால்)
அனைத்தும் அசல் மற்றும் நகல்

ஜாதி சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
மாற்றுச்சான்றிதழ் (TC)அல்லது தந்தையின் மாற்றிச்சான்றிதழ் (அ) தந்தையின் ஜாதி சான்றிதழ்
புகைப்படம்
தொலைப்பேசி otp வரும் அதனால்
அனைத்தும் அசல் மற்றும் நகல் வேண்டும்

வருமான சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
வருமான சான்று(payslip) + பான்கார்டு
தொலைப்பேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல் தேவை

இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை
ஆதார் அட்டை
தொலைபேசி otp வரும் அதனால்
புகைப்படம்
அனைத்தும் நகல் மற்றும் அசல்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து தேவை படுபவர்கள் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

இவன்
சர்வதேச சமூக நல்லிணக்க அறக்கட்டளை தலைவர்
ஸ்.ஷாஜி

05/03/2023

குறள்619 :

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

விளக்கம்:

விதி நமக்கு உதவ முடியாது போனாலும் முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

7அடி உயரத்தில் ஏறும் 1 வயது 6மாத அஞ்சா நெஞ்சம் லெனின் பெயருக்கேற்ப வீரன்

Address

9A1, South Street, Pothigaiyadai, Papanasam
Ambasamudram
627425

Website

Alerts

Be the first to know and let us send you an email when ISR TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category