Aathesh Builders and Property Developers

Aathesh Builders and Property Developers BUILDERS CONTRACTORS

23/07/2024
06/06/2024
மண் பானை நீர் அருந்தினால் சளி பிடிக்கும் எனச் சொல்லாதீர்கள்! சளி என்கிற கழிவைத் தான் மண் பானை வெளியேற்றும்!உங்கள் வீட்டு...
05/02/2024

மண் பானை நீர் அருந்தினால் சளி பிடிக்கும் எனச் சொல்லாதீர்கள்! சளி என்கிற கழிவைத் தான் மண் பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

மண்பானை நீர்_7- 8 pH அளவு கொண்டது"

இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,மூட்டு வலியும்...!
*************************
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பது தான் .
இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen").
ஒரு பொருள் 7 ற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமிலத் தன்மை உடையது.
( Acid ).
ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்தப் பொருள் காரத் தன்மை உடையது. (Alkaline).
நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது...!
ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.
அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.
இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.
இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத் தன்மையை அடையும்.
இது பல்வேறு உடல் நல கேடுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்றக் கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்றப் பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.
எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.
குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.R.O.WATER - 5 - 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு.
மண்பானை நீர் - 7- 8 pH அளவு.
R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.
தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.
நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.
ஏன் என்றால் #மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.
கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.
இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்...!

நன்றி : நாட்டு மருத்துவம்.

புத்தகம்  🌿☀️🌼🌻🌸🌿ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது "ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் ...
30/08/2023

புத்தகம்
🌿☀️🌼🌻🌸🌿

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

பெண்கள் கையில் இருக்கும் கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்
நாடு முன்னேறிவிடும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று
பதிலளித்தாராம் ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிப்பதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் என்றார் அறிஞர் அண்ணா..

“நீ படிக்க விரும்பும் புத்தகம் இன்னும் எழுதப்படவில்லையென்று நீ உணர்ந்தால், அத்தகைய புத்தகத்தை நீயே எழுத ஆரம்பித்துவிடு!”
*
-டோனி மாரிஸன்
---
நல்ல நூல்கள் நல்ல ஆசான்கள்.

****
🌿☀️🌼🌻🌸🌿

Completed project at chidambaram.
19/07/2020

Completed project at chidambaram.

Address

Chennai

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 6pm

Telephone

+919445206692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathesh Builders and Property Developers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aathesh Builders and Property Developers:

Share