Asset Solutions Realty

Asset Solutions Realty We specialize in buying & selling land and plots, offering expert assistance with registration.

கடன் பத்திரங்கள் என்றால் என்ன?பாண்ட் (Bond) என்பது கடன் பத்திரங்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்...
28/10/2023

கடன் பத்திரங்கள் என்றால் என்ன?

பாண்ட் (Bond) என்பது கடன் பத்திரங்கள் ஆகும். பெரிய நிறுவனங்கள் மற்றும் அரசின் பொதுப் பணித்துறை ஆகியவை இந்தக் கடன் பத்திரங்களைப் பொது மக்களிடையே பணம் திரட்டுவதற்காக விற்கின்றன. இதை முதலீட்டாளர்கள் கடன் பாதுகாப்பிற்காக வாங்குகின்றனர். இந்தப் பத்திரங்களை வைத்திருப்போருக்கு அந்தக் காலக்கட்டங்களில் நிறுவனங்கள் அல்லது அரசு வட்டி செலுத்தும். பெரும்பாலும் இந்த வகைப் பத்திரங்களில் ரிஸ்க் ஆதிகம் இருக்காத காரணத்தினால் முதலீட்டாளர்கள் இதனை முதலீட்டுக் காலத்தில் வட்டி பெறவும் வரி விலக்குப் பெறவும் உபயோகிக்கின்றனர்.

இந்தப் பத்திரங்களின் விலை வட்டிக்கு நேர் எதிரானது. அதாவது வட்டி அதிகம் இருப்பின், விலைக் குறைவாகவும், வட்டிக் குறைவாக இருப்பின் விலை அதிகமாகவும் இருக்கும்.

பல்வேறு வகையான பத்திரங்களைப் பற்றி பார்ப்போம்:

1. பொதுப்பணித்துறையின் பத்திரங்கள்: இவை அரசு துறைகள் அல்லது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறைகளின் பத்திரங்கள். பெரும்பாலும் இவை இடைக் கால அல்லது நீண்ட காலப் பத்திரங்களாகவே இருக்கும். இந்தப் பத்திரங்கள் உறுதிமொழி பத்திரங்கள், 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்வு காலம் இருக்கும்.

2. பெரிய நிறுவனப் பத்திரங்கள்: இவை பெரிய நிறுவனங்கள் தரும் பத்திரங்கள். இந்தப் பத்திரங்களுக்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டித் தரும். முதிர்வு காலத்தில் முதலுடன் சேர்ந்து முதிர்வு கால வட்டியையும் தரும்.

3. நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்கள் நிதி நிறுவனங்களும் வங்கிகளும் தருவதால் மிகவும் கட்டுப்பாடுகளுடன் நல்ல திட்டங்கள் கொண்டதாக இருக்கும். பெரும்பாலும் இந்தப் பத்திரங்களை பெரிய அளவிலான முதலீட்டளார்கள் வாங்குவார்கள்.

4. வரி சேமிக்கும் பத்திரங்கள்: வரி விலக்குப் பெறத் தனி நபர்கள் வாங்கும் பத்திரங்கள் இவை. இவற்றின் முக்கிய நோக்கம் வரி விலக்கு மற்றும் நீண்ட காலச் சேமிப்பு.

5. ஜீரோ கூப்பன் பத்திரங்கள்: இந்த வகைப் பத்திரங்களில் கூப்பன் தொகை அதாவது வட்டித் தொகை இருக்காது. ஆனால் நல்ல சலுகை விலையில் விற்கப்படும்.

6. மாற்றத்தக்கப் பத்திரங்கள்: இந்தப் பத்திரங்களை முதலீட்டளார்கள் பங்குகளாக மாற்றிக் கொள்ளலாம், ஆகவே இந்தப் பெயர்.

7. சர்வதேசப் பத்திரங்கள்: இவை வெளிநாட்டுப் பத்திரங்கள். இவை அந்தந்த நாட்டின் கரன்சியில் வழங்கப்படுகிறது. இது ஒரு பெரிய முதலீட்டு வாய்ப்பாகும்.

பத்திரங்களைப் பற்றி: மதிப்பு(ஃபேஸ் வால்யு): பத்திரம் முதிர்வின் போது முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் தரும் தொகையையே ஃபேஸ் வால்யு என்பார்கள். புதிதாக விற்கப்படும் பத்திரங்கள் இந்தத் தொகையிலே விற்கப்படும். இப்படி விற்கும் போது அதை டிரேடிங் அட் பார் (trading at par) என்று கூறுவர். அதே கூடுதல் மதிப்பில் விற்றால் அதைப் பிரீமியம் விலை என்றும் குறைவாக விற்றால் அதை சலுகை விற்பனை என்றும் கூறுவர்.

முதிர்வு தேதி: முதலீட்டாளரின் அசல் தொகைத் திருப்பி வழங்கப்படும் நாள்.

முதிர்வுக்கான காலம்: இது முதிர்வு தேதிக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம். நாளுக்கு நாள் இந்த வித்தியாசம் குறைந்து கொண்டே இருக்கும்.

கூப்பன் தொகை: பத்திரங்களின் காலத்தில் கொடுக்கப்படும் வட்டியைக் கூப்பன் தொகை என்று கூறுவார்கள். இந்தத் தொகை கொடுக்கப்படும் கால அவகாசத்தைப் பத்திரங்கள் முதலில் கொடுக்கப்படும் போதே நிர்ணயத்துவிடுவார்கள். பெரும்பாலும் இது வருடத்தில் இரு முறையாக இருக்கும். சில பத்திரங்களுக்கு கூப்பன் தொகைக்கு பதிலாக கூப்பன் மதிப்பைப் பத்திர மதிப்பின் சதவீதமாக அளிப்பார்கள். இதைக் கூப்பன் விலை என்று குறிப்பிடுவார்கள். இந்த முறையில் வருடத்தில் வரும் கூப்பன் தொகையைப் "மதிப்பு(ஃபேஸ் வால்யு)" X "கூப்பன் விலை" என்று கணக்கீடு செய்வார்கள். இந்தத் தொகை வருடத்தில் எத்தனைத் தவணைகளோ அதற்கு ஏற்றவாறு கூப்பன் தொகை முதலீட்டாளர்க்குச் செலுத்தப்படும். சேமிக்கப் பல வழிகள், இந்தப் பத்திரங்கள் ரிஸ்க் இல்லாத நிலையான வட்டித் தரும் முதலீடு மற்றும் சேமிக்கும் வழியாகவும் வாய்ப்பாகவும் கருதலாம். என்ன பத்திரம் வாங்கலாமா?

For more Bond tips, Contact us : +91 9514444118

#கடன்பத்திரங்கள் #ஃபேஸ்வால்யு #நிதிநிறுவனங்கள் #வரிசேமிக்கும்பத்திரங்கள் #ஜீரோகூப்பன் #மாற்றத்தக்கபத்திரங்கள் #சர்வதேசபத்திரங்கள் #வரிசேம #கடன்பத்திரங்கள் #பொதுப்பணித்துறை #பெரியநிறுவனபத்திரங்கள் #நிதிநிறுவனபத்திரங்கள் #வரிசேமிக்கும்பத்திரங்கள் #ஜீரோகூப்பன்பத்திரங்கள் #மாற்றப்பட்டபத்திரங்கள் #சர்வதேசப்பத்திரங்கள் #முதிர்வு #கூப்பன்தொகை #ஃபேஸ்வால்யு #வட்டித்தொகை #டிரேடிங் #நிதிநிறுவனத்துவம் #முதலீடு #சேமிப்பு #வரிவிலக்கு #பத்திரம் #தமிழ்

நில வழிகாட்டி மதிப்பு.. அது விடுங்க.. வணிக மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பும் உயர்வு? அரசு முடிவு என்ன?வணிக மனைகளுக்கான அரச...
24/10/2023

நில வழிகாட்டி மதிப்பு.. அது விடுங்க.. வணிக மனைகளுக்கான வழிகாட்டி மதிப்பும் உயர்வு? அரசு முடிவு என்ன?

வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டும் என அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.
வழிகாட்டி மதிப்பு என்பது நிலவிவகாரங்களில் மோசடிகளை தடுக்கவும், அந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதேபோல, பதிவுக் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க முயல்பவர்களையும் கண்டுபிடிக்க உதவுகிறது.. இதனால், நிலம் தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் ஊழல் மற்றும் மோசடிகளை எளிதாக தடுக்க முடியும்..

விற்பனை பத்திரம்: இந்த வழிகாட்டி மதிப்பு மற்றும் அடுக்குமாடி திட்டங்களில் வீடு விற்பனை பதிவுக்கான நடைமுறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்த போவதாக தமிழக அமைச்சர் மூர்த்தி சமீபத்தில் கூறியிருந்தார். அதாவது, சென்னை, கோவை நகரங்களில், 10 சதவீதம் வரையும், பிற நகரங்களில், 3, 5, 7 சதவீதங்களில் வழிகாட்டி மதிப்பை உயர்த்த ஆராய்ந்து வருவதாக கூறியிருந்தார்.

வழிகாட்டி மதிப்பு: இதற்குபிறகு, திடீரென வழிகாட்ட மதிப்பு உயர்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், தமிழகத்தில் அனைத்து இடங்களிலுமே வழிகாட்டி மதிப்பு மாற்றப்படவில்லை என்று பதிவுத்துறை உடனடியாக இதற்கு பதில் தந்திருந்தது.. பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு ஒன்றையும் அப்போது வெளியிட்டிருந்தார்.

அதில், அனைத்து தெரு மற்றும் சர்வே எண்களுக்கும், வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்படவில்லை, குறைந்தபட்ச மதிப்பை விட குறைவாக உள்ள தெரு மற்றும் சர்வே எண்களுக்கு மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வழிகாட்டி மதிப்புகள், tnreginet.gov.in என்ற பதிவுத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றுகூறி தெளிவுபடுத்தியிருந்தார்.

மறுபரிசீலனை: இந்நிலையில், வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து, வணிக அமைப்பு மாநிலப்பொதுச்செயலாளர் கோவிந்த ராஜுலு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் மூலமாக தெரிய வருகின்றது.

ஆன்லைன் வர்த்தகம்: வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், மூலப்பொருள் விலை உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, பணப் புழக்கம் குறைவு என பல்வேறு காரணங்களால் தொழிலும், வணிகமும் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

இந்த காலக் கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக்குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப் பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும்.

வருவாய் வரி: அரசுக்கான வரி வருவாய் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தமிழக முதல்வர் இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென அனைத்து தொழில் துறையினர், வணிகர்கள் சார்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#வழிகாட்டி #அரசுவழிகாட்டு #வணிகமனை #அரசுமதிப்பு #வணிகமனைஅமைச்சர் #மறுபரிசீலனை #வணிகநிறுவனம் #அரசுமுதல்வர் #வருவாய்வரி



#ஊழல் #வணிகமும் #அமைப்புமாநில #மாநிலச்செயலாளர் #அநேகத்தொழில் #தொழிலும #வணிகநிறுவனம் #மாற்றம் #வர்த்தகம் #வருவாய்வரி



























ஆன்லைனில் பட்டா சரிபார்ப்பு.. கட்டிட அனுமதிக்காக இனி அலைய தேவையில்லை.. தமிழக அரசின் சூப்பர் வசதிகட்டுமான பணியில், பொதுமக...
19/10/2023

ஆன்லைனில் பட்டா சரிபார்ப்பு.. கட்டிட அனுமதிக்காக இனி அலைய தேவையில்லை.. தமிழக அரசின் சூப்பர் வசதி

கட்டுமான பணியில், பொதுமக்களின் நன்மைக்காக இன்னொரு வசதி கொண்டுவரப்படுகிறது.. பட்டா உள்ளிட்டவற்றை சரிபார்க்க ஆன்லைனிலேயே இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் அனைத்துமே தற்போது ஆன்லைன் முறைக்கு மாறிவிட்டன.. எனவே, பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் தொடர்பான விவரங்களை அனைத்துமே, முன்னதாகவே அதற்குரிய வெப்சைட்களில் பதிவு செய்ய வேண்டும்.. இதனால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நேரம் மிச்சமாகிறது.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. இதனால், பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை..

திருமணம்: அதேபோல, திருமணம், சொத்து உள்ளிட்ட பதிவு சான்றிதழ்களை திருத்த இயலாத அளவிற்கு நிரந்தர ஆவணங்களாக மாற்ற தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் "நம்பிக்கை இணையம்" என்ற தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டுள்ளது.. மின்னணுமயமாக்கப்பட்ட ஆவணங்கள் முத்திரையிடுவதை நோக்கமாக கொண்டு செயல்படுவதால், இதனை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது.

ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இதற்கெல்லாம் கடிவாளம் போடவே, பத்திரப்பதிவு துறையில், இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கட்டுமான துறையிலும், புதுபுது வசதிகள் பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இப்போதுகூட, ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

கட்டுமான பணிகள்: அதாவது, கட்டுமான திட்ட அனுமதி பணிகளை ஒற்றை சாளர முறைக்கு மாற்றுவதற்காக, ஒருங்கிணைந்த புதிய இணையதளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளத்தில் டிடிசிபி மற்றும் சிஎம்டிஏ உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இருந்தாலும், கட்டிட அனுமதி கேட்டு, தாக்கலாகும் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, கூடுதலாக புதிய வசதிகள் தற்போது செய்யப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக, பட்டா, நில வரைபடம், கிராம வரைபடங்களை ஆய்வு செய்வற்காகவே, ஒற்றை சாளர முறைக்கான சாப்ட்வேரில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பதாரர்கள் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களை உறுதி செய்ய, அலைய வேண்டிய தேவை இருக்காது..

விரைவில் அறிவிப்பு: அதுமட்டுமல்ல, முதல் நிலை அலுவலரே இந்த ஆவணங்களை சரி பார்த்துவிட முடியும் என்பதால், விண்ணப்பதாரர்களுக்கு நேரமும் மிச்சமாகும் என்கிறார்கள். விரைவில் இந்த வசதி, பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

மோசடி பத்திரங்கள் ரத்து சட்டம் முடங்கியதன் பின்னணி என்ன?மோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் நடைமுறை முடங்கியதன் பின்னணி குற...
18/10/2023

மோசடி பத்திரங்கள் ரத்து சட்டம் முடங்கியதன் பின்னணி என்ன?

மோசடி பத்திரங்கள் ரத்து செய்யும் நடைமுறை முடங்கியதன் பின்னணி குறித்தும், அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும், பதிவுத்துறை உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

மோசடி பத்திரங்களை விசாரணை செய்து ரத்து செய்யும் அதிகாரம், மாவட்ட பதிவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா, ஜனாதிபதி ஒப்புதலுடன், 2022 ஆகஸ்ட், 16ல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத் திருத்தம், எந்த தேதியில் இருந்து பதிவான பத்திரங்களுக்கு செல்லும் என்பது தொடர்பாக, முறையான அறிவிப்பு இல்லை. அதனால், முன்தேதி குறிப்பிடாமல் இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதால், மோசடி பத்திரங்கள் தொடர்பான விசாரணையை, பதிவுத்துறை நிறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மோசடி பத்திரங்களை பதிவு செய்யும் சார் - பதிவாளர்கள் மீது, வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க, 2012ல் விதிகள் வகுக்கப்பட்டன.அப்போது, ஐ.ஜி.,யாக இருந்த தர்மேந்திரபிரதாப் யாதவ், இதற்கான சுற்றறிக்கை பிறப்பித்தார்.

இதுபோன்ற விஷயங்களை, சுற்றறிக்கையாக அமல்படுத்தக் கூடாது; சட்டத்திருத்தம் வாயிலாகவே அமல்படுத்த வேண்டும் என, சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதில், நீதிமன்றம், சட்டத்திருத்தம் கொண்டு வர பரிந்துரைத்த நிலையில், அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், மோசடி பத்திரங்களை ரத்து செய்யும் சட்டத் திருத்தத்தில் ஒரு பகுதியாக, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளருக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கும் சட்ட சிக்கல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்தும் காலவரம்பு விஷயத்தை தெளிவுபடுத்தி, நீதிமன்ற அனுமதி பெறுவது குறித்து, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறோம். இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, சட்டச் சிக்கல் ஏற்படுத்தியதற்கான பின்னணி குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

We specialize in buying and selling land and plots, offering expert assistance with property registration. Your trusted partner for hassle-free real estate transactions.


Asset Solutions Realty

#மோசடிபத்திரங்கள்
#சட்டமுடங்கியது
#பதிவுத்துறை
#மோசடிசட்டம்
#மாவட்டபதிவாளர்
#சார்பதிவு
#நீதிமன்றம்
#சட்டத்திருத்தம்








 #போலி  #பட்டா.. அதைவிடுங்க.. ஒப்புகை முத்திரை இருக்கா? பதிவுத்துறை அதிரடி..  #தமிழக_அரசு சொல்வது என்ன?பொது மக்களின் புக...
16/10/2023

#போலி #பட்டா.. அதைவிடுங்க.. ஒப்புகை முத்திரை இருக்கா? பதிவுத்துறை அதிரடி.. #தமிழக_அரசு சொல்வது என்ன?

பொது மக்களின் புகார்கள், வழக்கு தொடர்பான தபால்களை அலட்சியமாக கையாளும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும் வகையில், பதிவுத்துறை புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது....

பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதேபோல, நிறைய முறைகேடுகள் நடப்பதால், அதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, போலி பத்திரங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

ஆள் மாறாட்டம்: அதனால்தான், ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.

அந்தவகையில், போலி ஆவண மோசடியில் சிக்குபவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், இன்னொரு அதிரடியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது..

அதாவது, பத்திரப்பதிவில் தவறுகள் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களிடம் புகார்களை தந்து வருகிறார்கள்.. இப்படி தரப்படும் புகார்களை, முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.. ஆனால், பொதுக்களின் புகார்களை, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக தெரிகிறது.

புதிய உத்தரவு: மேலும், #நீதிமன்ற உத்தரவுகளையும், நோட்டீஸ்களையும் கிடப்பில் போட்டுவிடுவதாகவும் புகார் கிளம்பி உள்ளது.. அதனால்தான், பதிவுத்துறை தற்போது உத்தரவினை பிறப்பித்துள்ளது.. அந்த உத்தரவில் உள்ளதாவது:

- புகார்கள், வழக்குகள் தொடர்பான கடிதங்கள் கிடப்பில் போடப்படுவதால், துறைக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிக்கல்கள் ஏற்படுகின்றன.

- வழக்குகள் தொடர்பான குறிப்புகளை அனுப்பும் அதிகாரிகள், மிக கவனமாக செயல்பட வேண்டும்..

- குறிப்பு ஆவணங்களில், அதை அனுப்பும் அதிகாரியின் விபரங்கள் முறையாக இடம் பெற வேண்டும்.

- #வழக்கு தொடர்பான தபால்களின் ஒப்புகை சீட்டு வந்தால், அதில் முறையாக ஒப்புகை முத்திரை, தேதியை குறிப்பிட்டு அனுப்ப அனுப்ப வேண்டும்..

- புகார்கள், வழக்கு கடிதங்களில், டிஐஜிக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

- அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை பாயும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஐஜிக்களுக்கு பதிவுத்துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.

#போலி #பதிவுத்துறை #தமிழகஅரசு #ஆள்மாறாட்டம் #அதிரடி #புகார்கள் #வழக்கு #நீதிமன்ற #உத்தரவு

#பதிவுத்துறைகட்டுப்பாடு #நடவடிக்கை #போலிபத்திரங்கள் #அதிகாரிகள் #நீதிமன்றஉத்தரவு #டிஐஜிகள் #புகார்கள்திருத்தப்படுதல்


Asset Solutions Realty

14/10/2023

🏡 Welcome to Asset Solutions Realty 🏡

At Asset Solutions Realty, we're dedicated to simplifying your real estate journey. From land development to documentations, missing document arrangements to registrations, and plot and land buy/sale, we have your real estate needs covered.

Our Services:

🏗️ Land Development: We turn your real estate dreams into reality, one plot at a time.

📄 Documentations: Navigating the paperwork maze, simplifying your transactions.

🔍 Missing Document Arrangements: We find the missing puzzle pieces, so you don't have to.

📋 Registrations: Expert registration services for a worry-free experience.

🏞️ Plots and Lands Buy/Sale: Your ideal property is waiting for you. Let's find it together!

🏡 Doorstep Services: Real estate solutions delivered to your doorstep, because convenience matters.

Your real estate journey begins here with Asset Solutions Realty. Contact us today to start your exciting adventure! 🌐🤝



Contact us: 9514444118

We specialize in buying & selling land and plots, offering expert assistance with registration.

🏡 Welcome to Asset Solutions Realty 🏡At Asset Solutions Realty, we're dedicated to simplifying your real estate journey....
13/10/2023

🏡 Welcome to Asset Solutions Realty 🏡

At Asset Solutions Realty, we're dedicated to simplifying your real estate journey. From land development to documentations, missing document arrangements to registrations, and plot and land buy/sale, we have your real estate needs covered.

Our Services:

🏗️ Land Development: We turn your real estate dreams into reality, one plot at a time.

📄 Documentations: Navigating the paperwork maze, simplifying your transactions.

🔍 Missing Document Arrangements: We find the missing puzzle pieces, so you don't have to.

📋 Registrations: Expert registration services for a worry-free experience.

🏞️ Plots and Lands Buy/Sale: Your ideal property is waiting for you. Let's find it together!

🏡 Doorstep Services: Real estate solutions delivered to your doorstep, because convenience matters.

Your real estate journey begins here with Asset Solutions Realty. Contact us today to start your exciting adventure! 🌐🤝



Contact us: 9514444118

07/10/2023

Plots available for Joint venture in Singaperumal Koil, Chengalpattu district

🏡 Asset Solutions Realtyக்கு வரவேற்கிறோம் 🏡Asset Solutions Realtyயில், உங்கள் ரியல் எஸ்டேட் பயணத்தை எளிதாக்குவதற்கு எங்க...
07/10/2023

🏡 Asset Solutions Realtyக்கு வரவேற்கிறோம் 🏡

Asset Solutions Realtyயில், உங்கள் ரியல் எஸ்டேட் பயணத்தை எளிதாக்குவதற்கு எங்களை அர்ப்பணித்துள்ளோம். நில மேம்பாடு முதல் ஆவணங்கள் பத்திரப்பதிவு வரை, காணாமல் போன ஆவணம் நகல் ஏற்பாடுகள், மற்றும் ப்ளாட் மற்றும் நிலம் வாங்குதல்/விற்பனை வரை, உங்களின் ரியல் எஸ்டேட் தேவைகள் எங்களை அணுகலாம்.

எங்கள் சேவைகள்:
🏗️ நில மேம்பாடு: உங்களின் ரியல் எஸ்டேட் கனவுகளை ஒரு நேரத்தில் செயல் திட்டமாக மாற்றுகிறோம். #நிலமேம்பாடு

📄 ஆவணங்கள்: காகிதப்பணி பிரமை வழிசெலுத்துதல், உங்கள் பரிவர்த்தனைகளை எளிதாக்குதல். #ஆவணப்படுத்தல் #காகிதப்பணிஎளிமைப்படுத்தப்பட்டது

🔍 தொலைந்த ஆவணம் ஏற்பாடுகள்: தங்களுடைய தொலைந்த பத்திரங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு நகல் வாங்கி தருகிறோம்

📋 பத்திர பதிவுகள்: கவலையற்ற அனுபவத்திற்கான பத்திர பதிவுச் சேவைகள். #பதிவுகள் #இணக்கம்

🏞️ மனைகள் மற்றும் நிலங்கள் வாங்க/விற்பனை: உங்களின் சொத்து உங்களுக்காக வாங்கவும், விற்கவும் நாங்கள் காத்திருக்கிறது.

🏡 வீட்டு வாசலில் சேவைகள்: ரியல் எஸ்டேட் தீர்வுகள் உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படும், ஏனெனில் தங்களில் பொன்னான நேரம் எங்களுக்கு முக்கியமானது. # வீட்டு வாசலில் சேவைகள் # ரியல் எஸ்டேட் வசதி

உங்கள் ரியல் எஸ்டேட் பயணம் இங்கே Asset Solutions Realtyயுடன் தொடங்குகிறது. உங்கள் அற்புதமான சாகசத்தைத் தொடங்க இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 🌐🤝 #9514444118

🏡 Welcome to Asset Solutions Realty 🏡At Asset Solutions Realty, we're dedicated to simplifying your real estate journey....
07/10/2023

🏡 Welcome to Asset Solutions Realty 🏡

At Asset Solutions Realty, we're dedicated to simplifying your real estate journey. From land development to documentations, missing document arrangements to registrations, and plot and land buy/sale, we have your real estate needs covered.

Our Services:

🏗️ Land Development: We turn your real estate dreams into reality, one plot at a time.

📄 Documentations: Navigating the paperwork maze, simplifying your transactions.

🔍 Missing Document Arrangements: We find the missing puzzle pieces, so you don't have to.

📋 Registrations: Expert registration services for a worry-free experience.

🏞️ Plots and Lands Buy/Sale: Your ideal property is waiting for you. Let's find it together!

🏡 Doorstep Services: Real estate solutions delivered to your doorstep, because convenience matters.

Your real estate journey begins here with Asset Solutions Realty. Contact us today to start your exciting adventure! 🌐🤝

Address

Anna Nagar
Chennai
600040

Telephone

+919514444118

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asset Solutions Realty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asset Solutions Realty:

Share