Land Lovers ECR Chennai

Land Lovers ECR Chennai Hi Am Realtor In Chennai ECR Any Real Estate Need Land Buying orSelling&Rental Call or Mail Me 09884666000 or 09962999888 or [email protected] thanq

11/03/2026
16/08/2023

அன்பு குழந்தையே...

விதர்ப்பங்களான பேச்சுகளும், செய்கை களும் உன் முன்னர் மற்றவர்களால் நடக்கி றதா? உன் கோபம் வெறுப்பு எரிச்ச லின் உச்சத்தில் அந்த பேச்சுகளும் செய் கைகளும் கொண்டு போய் விடுகிறதா? கவலைக் கொள்ளாதே.

உன்மனதில் சிலவிஷயங்களில் இன்னும் தெளிவு தேவைப்படுகிறது. பக்குவம் அடைய வேண்டியதாய் இருக்கிறது, அதை நீ கற்க வேண்டும் என்பதற்கே இந்த நிகழ்வு அமைதியாய் சுமூகமான முறையில் ஒரு விஷயத்தை கையாளும் பண்பு என்பது அறிவுடைமையில் சிறந்த பண்பு ஆகும்.

பிறவியிலே அறிவுடைமையான ஆன்மா நீ. இதனை தெரிந்துக் கொள்வதற்கு கணக்கு இல்லை. ஒவ்வொரு நிமிடம் மனிதர்களிடத்தில் நாம் பயிலும் கல்வியே அறிவுடைமையிலும், நற்பண்புகளிலும் சிறந்து விளங்க செய்யும்.

அதை உனக்கு போதிப்பதற்கே இந்த சூழ் நிலைகள். ஒரு பாத்திரத்தை நீ தண்ணீரி ல் அழுத்தினால் அப்போதைய சூழ்நிலை க்கு கீழே செல்வது போன்று இருக்கும் ஆனால் மறுபடியும் இரண்டு மடங்கு மேலோங்க செய்யும்.

இதுவே அதனை தண்ணீரில் விட்டு அழுத் தாமல் வைத்துப்பார். அது குறிப்பட்ட அளவு தண்ணீர் வந்தவுடன் தானாகவே கீழே சென்று விடும். அதைப் போல உன் சூழ்நிலைகளைப் புரிந்துக் கொண்டு செயல்படு. தேவையில்லாமல் மனதை பாரம் ஆக்காதே. மனம் அமைதியாவதற்கு சூழ்நிலைகள் உருவாகாது நீ தான் அதை அமைதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கோபத்தில் பேசலாம். அமைதியாகவும் எதற்கும் செவி கொடுக்காமலும் செல்ல லாம். எது உனக்கு நல்லது என்று யோசித் துப் பார். அதனால் எதற்கும் பயப்படாதே. கலங்காதே.. உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உலகத் தில் என்ன மாறினாலும் நான் உன்னை விட்டு ஒருபோதும் அகல மாட்டேன் உன்னி ல் எப்போதும் இருப்பேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்...
10.08.2023... நேசமுடன் விஜயராகவன்....

25/03/2023

அன்பு குழந்தையே...

சொந்த பந்தங்கள் எல்லாம் சுகமாக இருக்கும் வரை , பெற்ற பிள்ளைகளோ தேகம் நலமாக இருக்கும் வரை மட்டுமே என்பதை உணர்.

அவர்கள் செய்கிற அவமதிப்புகளை அலட்சியம் செய்து விட்டு, துணிவுடன் துண்டை உதரித் தோள் மீது போட்டுக் கொண்டு என்னிடம் வா.

நான் உனக்கு பணிவிடை செய்யும் நல்ல குழந்தையாய் இருப்பேன். அறிவுரை கூறுவதில் நல்ல குருவாய் நடப்பேன். துக்கம் வரும்போது தோளில் போட்டுத் தட்டும் தாயாய் இருப்பேன்.

இனி ஜென்ம ஐென்மமாய் இந்த உறவி னைப் பேணிக் காக்கும் உண்மையான நண்பனாக நான் விளங்குவேன்.

ஞான ஒளியை ஏற்றி வைக்கிறேன். விழி ப்புடன் என்னை பின்தொடர்ந்துவா. விட்டு விட்டால் கும்மிருட்டில் சிக்கி கொள்வாய்.

சூரியனை பாா்ப்பாய், ஆனால் வெளிச்சம் கிடைக்காது, கண்களை மூடுவாய்,தூக்கம் வராது, நன்மை செய்ய நாடுவாய், தீங்காக முடியும்.

அன்பை விதைக்க நினைப்பாய், வெறுப் பை அறுவடை செய்வாய், காலம் மாறி விட்டது என உணர்ந்து திருந்தி என்னை அடைய வா.

மாறாக விழித்துக்கொண்டால் நள்ளிருளி லும் சூரியன் உன் மீது உதிக்கும், கண்கள் பாா்வை இழந்து போனாலும் காட்சிகள் தெளிவாகத் தெரியும்.

உன்னை சுற்றி ஒரு ஒளி வட்டம் தோன்றி பெரு வாழ்வுக்குத் தகுதியான ஆள் நீ என்று சான்று கூறும். எதற்கும் தயாராக இரு. உன்னுடன் தான் இருக்கிறேன்.

ஓம் ஶ்ரீ சாய் ராம்...
23.03.2023... நேசமுடன் விஜயராகவன்....

Address

East Coast Road, Neelankarai
Chennai
600115

Telephone

919884666000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Land Lovers ECR Chennai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Land Lovers ECR Chennai:

Share

Category