05/01/2015
செல்பி' படம் எடுக்க சிறப்பு வகுப்பு:லண்டன் கல்வி நிறுவனம் திட்டம்:
லண்டன்:தனக்குத் தானே படம் எடுத்துக் கொள்ளும் 'செல்பி' கலையை, பிரிட்டனை சேர்ந்த கல்வி நிறுவனம் ஒரு மாத பயிற்சி வகுப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது.ஸ்மார்ட் போன்களின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, தனக்குத் தானே படம் எடுத்துக் கொள்ளும் செல்பி கலாசாரமும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, இதை தொழில் முறையில், பயிற்று விக்க, லண்டனை சேர்ந்த கல்வி நிறுவனம் முன் வந்துள்ளது.
இதற்காக, வரும் மார்ச் மாதம் ஒரு மாத சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில், சிறந்த முறையில் செல்பி படம் எடுப்பது குறித்தும், அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்தும் பயிற்றுவிக்கப்படும் என கல்வி நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படக் கலையில், சாதித்த பிரபலங்களைக் கொண்டு இந்த வகுப்பை நடத்த திட்ட மிட்டுள்ளனர். இந்த வகுப்பில் சேர, 10 ஆயிரம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.