Amuthan Electronics

Amuthan Electronics நம்ம ஊர், நம் பெருமை கடலூர்

🏠 Work From Home / Part Time & Full Time Opportunities in Chidambaram!💬 Online or Direct Interview available.📩 Message u...
26/10/2025

🏠 Work From Home / Part Time & Full Time Opportunities in Chidambaram!
💬 Online or Direct Interview available.
📩 Message us to apply.
Call : 7871142720

தொழுதூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் #கடலூர் மாவட்டம் தொழுதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முக...
24/10/2025

தொழுதூர்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

#கடலூர் மாவட்டம் தொழுதூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிகழ்ச்சியை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.

 #கடலூர்: அப்பாவை  #கத்தியால்  #வெட்டிய  #மகன் கைதுதிட்டக்குடி அருகே ராமநத்தம் கிழக்கு தெருவில் வசிக்கும் பழனிமுத்து (49...
15/10/2025

#கடலூர்: அப்பாவை #கத்தியால் #வெட்டிய #மகன் கைது

திட்டக்குடி அருகே ராமநத்தம் கிழக்கு தெருவில் வசிக்கும் பழனிமுத்து (49) என்பவர், நேற்று இரவு குடிபோதையில் தனது மகன் கார்த்தி (23) என்பவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, அப்பாவை முகத்தில் கத்தியால் வெட்டி, செங்கற்களால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனிமுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைது செய்துள்ளனர்.

கடலூர்: ஆன்லைன் லாட்டரி விற்பனை.. பாஜக பிரமுகர் கைதுகடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ப...
14/10/2025

கடலூர்: ஆன்லைன் லாட்டரி விற்பனை.. பாஜக பிரமுகர் கைது

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், புதுநகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி, பிரகாஷ் (44) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 செல்போன்கள் மற்றும் ரூ. 22 லட்சத்து 94 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

12/10/2025

#கடலூர்

கடலூர்:  #பாதுகாப்பு  #எச்சரிக்கை விடுப்பு #கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சாத்தனூர் அணையிலிருந்து ...
12/10/2025

கடலூர்: #பாதுகாப்பு #எச்சரிக்கை விடுப்பு

#கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சாத்தனூர் அணையிலிருந்து வினாடிக்கு 4000 கனஅடி உபரி நீர் தென்பெண்ணையாற்றில் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆற்றைக் கடப்பது, குளிப்பது, துணி துவைப்பது, குழந்தைகளை குளிக்க விடுவது, மற்றும் இளைஞர்கள் செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 #கடலூர்: கரையோர  #மக்களுக்கு  #எச்சரிக்கைகடலூர் மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி உபரி நீர் த...
11/10/2025

#கடலூர்: கரையோர #மக்களுக்கு #எச்சரிக்கை

கடலூர் மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 4,000 கன அடி உபரி நீர் திறக்கப்படவுள்ளது. அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை நெருங்கியுள்ள நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், பெண்ணையாற்றின் கரையோர கிராம மக்களுக்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும், இளைஞர்கள் செல்பி எடுக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலூர், சிதம்பரத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்..கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...
09/10/2025

கடலூர், சிதம்பரத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல்..

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் கடலூர் அரசு மருத்துவமனையில் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்தனர். இதில் 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல் சிதம்பரம் அரசு மருத்துவமனையிலும் 2 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Address

#76, Mannargudi Street
Chidambaram
608001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amuthan Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category