04/08/2021
Real Estate Investment Trust (REIT) ஒரு பார்வை
மனித குலத்துக்கே வீடு மற்றும் நிலத்தின் மீது காதல் உண்டு. பரம்பரை சொத்து, தலைக்கு மேல கூரை போன்ற Emotional விசயங்களைத் தவிர்த்து முதலீட்டு வாய்ப்புகளிலும் அது ஒரு முக்கிய இடம் பெறுகிறது.
முதலீடு செய்ய வேறு வாய்ப்புகள் தெரியாதவர்கள், தங்களது Portfolio வை Diversify செய்யநினைப்போர் என அனைத்து வகை முதலீட்டாளர்களும் Real Estate இல் முதலீடு செய்கின்றனர்.
சொந்த வீடு அல்லது நிலம் வாங்கி அதன் மதிப்பு உயர்ந்த பின் விற்று லாபம் சம்பாதித்து வந்தது இதுவரை சாத்தியமாக இருந்தது. மொத்தமாக பணம் தேவை, கடன் வாங்கினால் வட்டியே லாபத்தில் பெரும் பகுதியாக போய்விடும், வீட்டு மதிப்புக்கு ஏற்ப வாடகை வருவதில்லை, நில அபகரிப்பு என பல காரணங்களால் இந்தியாவில் குறிப்பா தமிழகத்தில் Real Estate முதலீட்டின் மீதான ஈர்ப்பு குறைந்து வருகிறது.
இந்தப் பிரச்சனைகள் இல்லாமலும் இருக்கணும் அதே நேரத்தில் Real Estate இல் முதலீடு செய்யணும் என்றும் நினைப்போருக்கான ஒரு முதலீட்டு வாய்ப்பு Real Estate Investment Trust (REIT).
REIT என்றால் என்ன?
A real estate investment trust is a company that owns, and in most cases operates, income-producing real estate எனபது இதன் Definition.
REIT முதலீடு எப்படி செயல்படுகிறது?
ரொம்ப Technical ஆ போகாம சொல்லணும்னா, கிட்டத்தட்ட மியூச்சுவல் ஃபண்ட் போல செயல்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டில் அதை நிர்வகிப்பவர் பொதுமக்களிடமிருந்து பணம் பெற்று அதை பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்வார். REIT பொதுமக்கள், Companies & Institutions இடமிருந்து பணத்தைப் பெற்று அதை பல்வேறு கட்டிடங்களில் முதலீடு செய்யும்.
எவ்வகை முதலீடுகள்?
REIT ஃபண்ட்கள் அலுவலகங்கள், மருத்துவமனைகள், Warehouse, Shopping Malls, தொகுப்பு வீடுகள் இப்படி எல்லாவிதமான கட்டிடங்களிலும் முதலீடு செய்யும்.
ஒரு வகையில் மட்டும் முதலீடு செய்யும் REIT (Retail, Housing, Healthcare) களும் உண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் முதலீடு செய்யும் REITகளும் உண்டு
முதலீட்டாளர்களுக்கு வருமானம் எப்படி வரும்?
எப்படி ஒரு வீடு வாங்கினால் மாதாந்திர வாடகை வட்டி மற்றும் விற்கும் போது மதிப்பு உயர்வு போன்றே இதிலும் நடக்கும். வரும் வாடகையில் நிறுவன செலவு போக மீதம் டிவிடெண்ட் ஆக வழங்கப் படும். சொத்து விற்கப்படும் போது லாபமும் முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கப் படும்.
உலகச் சந்தை / இந்தியச் சந்தை :
உலக அளவில் REIT பிரசித்தி பெற்றது. கிட்டத்தட்ட 2 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு REITகளில் முதலீடு இருக்கிறது. இந்தியாவில் இதுவரை REIT இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. பங்குச் சந்தையை கண்காணிக்கும் SEBI தான் REIT யும் கண்காணிக்கிறது, மேற்பார்வை செய்கிறது. SEBI வழிமுறைகளின் படி REITகள் 90% நிகர லாபத்தை முதலீட்டாளர்களுக்கு டிவிடெண்ட் ஆக வழங்க வேண்டும், 80% க்கு குறையாமல் வருமானம் தரக்கூடிய கட்டிடங்களில் முதலீடு செய்ய வேண்டும், 10%க்கு மேல் கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடங்களில் முதலீடு செய்யக்கூடாது (அவை நீண்ட நாட்களுக்கு வருமானம் தராது)
REITகளின் சாதகங்கள்
1. பிற ரியல் எஸ்டேட் முதலீடுகள் போல இல்லாமல் இவை வெளிப்படைத் தன்மை மிக்கவை
2. வீடு நிலம் போலல்லாமல் இவற்றின் Liquidity அதிகம். முதலீட்டாளர் விரைவில் பணத்தை எடுக்க முடியும்
3. வாடகை, வைப்பு நிதி வட்டி இவற்றை விட REIT முதலீடுகள் Tax Efficient
4. வீடுகளை வைத்திருந்தால் அவற்றை நிர்வகிக்க வேண்டும். REITகளில் அந்த வேலை நமக்கில்லை
5. பங்குகள் கடன் பத்திரங்களை மட்டும் நம்பி இருக்காமல் Portfolio Diversification க்கு இவை உதவும்
REIT முதலீடுகளில் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?
இந்தியாவின் REIT களில் முக்கியமானது Embassy Office Parks REIT. இது கடந்த நிதியாண்டில் தந்த டிவிடெண்ட் 22 ரூபாய்கள். சென்ற மாதம் இதன் ஒரு யூனிட்டின் விலை 324 ரூபாய். அதாவது இதன் ஒரு யூனிட் வைந்திருந்தவருக்கு சென்ற ஆண்டு கிடைத்தது 6.8%, மேலும் இந்த யூனிட்டின் இன்றைய விலை 362.5 ரூபாய்கள். டிவிடெண்ட் தவிர இந்த Capital Appreciation ம் கிடைத்திருக்கிறது. இந்நிறுவனத்தைத் தவிர
Mindspace Business Parks REIT தந்தது 5.8% Brookfield India REIT தந்தது 8.5%.
வருமான வரி உண்டா?
எல்லா முதலீடுகளையும் போல REIT வருமானத்துக்கும் வரி உண்டு. ஆனால் நான் ஏற்கெனவே சொன்னது போல இது கொஞ்சம் Tax Efficient.
நிறுவனம் தரும் டிவிடெண்ட் மூன்று Category ஐ உள்ளடக்கியது
Interest – Taxable as per your slab
Amortization of Special Purpose Vehicle – Not Taxable
Dividend : REIT நிறுவனம் Tax Concession வாங்காத பட்சத்தில் இதற்கு வரி கிடையாது
Capital Appreciation : Like any other capital gain – 10% Long Term capital gain after indexation.
REIT இல் முதலீடு யாருக்கு?
கடன் வாங்கி தொகுப்பு வீடுகளில் ஒன்றை வாங்கி அதை வாடகைக்கு விட முடியாமல் அல்லது சொற்ப வாடகைக்கு விடுவதை விட இது சிறந்த தெரிவு
பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்தவர்கள் Diversification க்கு Choice தேடினால் இது ஒரு நல்ல தெரிவாக இருக்கும்.
மிதமான தொடர் வருமானம் அதுவும் வட்டியை விட Tax Efficient தெரிவு தேடுவோருக்கும் இது ஒரு நல்ல தெரிவு.
ஓய்வு காலத்துக்கான முதலீடு என்பவை மாரத்தான் போன்றது அது நூறு மீட்டர் ஓட்டப்பந்தயம் அல்ல என்று உணர்ந்தவர்களுக்கு இதுவும் ஒரு நல்ல தெரிவு
REIT இல் முதலீடு செய்யலாமா? எதில் முதலீடு செய்வது?
முதலில் REIT பத்தி தேடிப்படித்து அறிந்து கொள்ளுங்கள். அப்புறம் இந்தியாவில் உள்ள அனைத்து REIT Fund கள் குறித்தும் அவற்றின் Performance குறித்தும் படித்து தெரிந்து கொண்ட பின் இது உங்களுக்கு சரியான முதலீடாக இருக்கும் என நீங்கள் நம்பினால் உங்க சொந்த முடிவின் படி இவற்றில் முதலீடு செய்யுங்கள்