01/09/2026
கண்டிக்கின்றோம்..
TVK அரசை...
இந்து அறநிலை துறை செயல்பாடு ஏற்புடையதாக இல்லை...
ஆண்டிராய்டு கேமரா மொபைல்கள்மூலம் தான் படம் பிடிக்கப்பட்டு பல கோயில்களும் பிரபலமாகி அதன் கலை படைப்புகள் வெளி உலகிற்கு தெரிந்து. அதன்மூலம் கலைப்படைப்புகளின் மகத்துவம் அறிந்து நேரில் காணும் பேரார்வம் அதிகரித்து சுற்றுலாபயணிகள் அதிகமாக வரத்தொடங்கினர். இப்படி கைபேசியை தடைசெய்வது அங்குள்ள தமிழ் கல்வெட்டு களை அழித்து வரலாற்று உண்மைகளை மறைத்து புனைவு கதைகளால் வேறு மொழிகளில் பொய்யான தகவல்களை பதிவு செய்யவே ஏதுவாக இருக்கும்.
இதற்கு உதாரணமாக காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் கருவறையை சுற்றியுள்ள வெளிப்பகுதியில் தமிழ் கல்வெட்டுகள் மீது அதனை மறைத்து முழுமையாக சமஸ்கிருத இந்தி கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல கோயில்களிலும் மோசடியாக தமிழ் கல்வெட்டுகள் மீதும் அதன் உண்மையான வரலாற்று குறிப்புகள் மீது பொய்யான தகவல்கள் பதிக்கப்படுகின்றது. இனி என்னென்ன மோசடி வரலாறு வருங்கால சந்ததிகள் படிக்க வேண்டிவருமோ?! இதன்மூலம்.