19/03/2024
ஒசூரில் சொந்த வீடு கட்ட இது சரியான தருணமா?
இப்போது ஏன் வீடு கட்ட வேண்டுமென்ற
முக்கியமான 6 காரணங்களைப் பார்ப்போமா?
1. கடந்த எட்டு மாதங்களாக நிறுத்தி வைக்கபட்டிருந்த பிரதான் மந்திரி வீடு கட்டும் திட்டம்(PMAY) தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய அரசு பொறுப்பேற்றப்பின் தொடங்கயிருப்பதாக இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின்படி யாராவது ஒரு விண்ணப்பதாரர் பெண்ணாகவும் கட்டப்படும் வீடு முதல் வீடாகவும் இருக்கும்பட்சத்தில் கடன்தொகையில் 2.6 லட்சம் மானியம் கிடைக்கும். இந்த தொகை அதிகரிக்கவும் படலாம். அப்படியென்றால் இதுதானே சரியான தருணம்!
2. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் வீட்டுக் கடனுக்கான இன்றைய குறைந்த பட்ச வட்டியான 8.3 சதவீதத்திலிருந்து 1-2 சதவீதம் சலுகை ஏப்ரல்-ஜீனுக்கு பிறகான காலாண்டில் கிடைக்குமென்று கண்டிப்பாக எதிர்ப்பார்க்கலாம்.பெரிய தொகை சேமிக்க முடியும். எனவே உடனே கட்டுங்கள் வீடு!
3. pmsuryghar.gov.in என்ற திட்டத்தில் வீட்டின் மேற்கூரையில் சோலார் மின்கூரை அமைத்து வீட்டிற்க்கு தேவையான மின்சாரம் தயாரித்துக் கொண்டு கூடுதல் மின்சாரத்தை மின்சார வாரியத்திற்கே விற்கவும் முடியும். அதற்கான சோலார் தகடுகள், மின்கலன்கள் 40% மானியத்தில் குறைந்த வட்டியில் கடனாக கிடைக்கின்றன. புது வீடு கட்டும்போது அதற்கான கடனுடன் இன்னும் குறைந்த வட்டியில் வாங்கிக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. வாழ்நாள் முழுதும் இலவச மின்சாரம். ஏன் இந்த வாய்ப்பை விடுவானேன்?
4. மாதச்சம்பளம் பெற்று ஆண்டுதோறும் வருமானவரி கட்டுவோர் தங்களது முதலீட்டை வீடாக கட்டும்போது 80C செக்சனில் 1.5லட்சம் வரை வருமான வரியிலிருந்து விலக்கு பெறலாம். காலி நிலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது பொருந்தாது. அப்போ வீடாக முதலீடு செய்வதுதானே லாபம்!
5. ஒசூரை சுற்றியுள்ள 133 கிராம பஞ்சாயத்துக் களும் அதற்குட்பட்ட கிராமங்களும் வருகின்ற ஜீன் மாதத்திற்க்கு பிறகு ஒசூர் மாநகர வளர்ச்சி அமைப்புடன்(Hosur Urban Development Authority-HUDA) இணைக்க தயாராக உள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் பட்சத்தில் நிலம் & கட்டிடங்களுக்கான வரி மாநகராட்சியாக மாற்றப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். சொத்தின் மதிப்பும் கூடிவிடும். அதே நேரத்தில் கட்டுமான விலையும் கூடும் பொருட்களின் விலையும் கூடும். இன்றே நிலம் வாங்கி வீடு கட்டும்போது இந்த விலை ஏற்றத்தை தவிர்த்து கணிசமான தொகையை சேமிக்கலாம்.எனவே...உங்களுக்கே தெரியும்!
6.தொழில் நகரான ஒசூரைச் சுற்றி STRR(Satellite Town Ring Road),Inner Ring Road, Outer Ring Road,Proposed Airport in Thally Road,Namma Metro, Broadcage Railway Station with Vandhe Bharath Trains, Maranayakanahalli Goods Depot For Trains, International Flower Market, National Vegetable Market, New Moffusil Bus Stand, Old Local Bus Stand,New Court, New Government Hospital,Medical College,IT park போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் Sipcot 1,2,3,4&5, Sidco, Worlds Largest Iphone Manufacturing Unit in Tata Electronics, Electric Vehicle Manuctures Like Ather, OLA,IQube,Sri Varu Motors,Simple Energy, Rolce Royce, TVS, Ashok Leyland,Caterpillar, TITAN, Exide, Carborundum, TTK, Bata, Delta, Astral,GRB போன்ற எண்ணற்ற நிறுவனங்கள் 5லட்சம் ஊழியர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்கி 5.8% GDPயுடன் இந்தியாவில் வேகமாக வளரும் தொழில் நகரமாக ஒசூரை மாற்றி வருகின்றது. எல்லா உட்கட்டமைப்பு வசதி மற்றும் தொழில் நிறுவனங்களும் இன்று தொடக்க நிலையில் இருப்பதால் நிலம் மற்றும் கட்டுமான விலை மிதமானதாகவே இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் இதன் விலை விண்ணைத் தொடும் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.
இதுபோன்ற தேர்தல் காலங்கள், வளர்ச்சிக்கான காலங்கள் எப்பொழுதும் நமக்கு வாய்ப்புகளை அள்ளி கொடுக்கும்.
இன்று நாம் முதலீடு செய்யும் ஒரு சில லட்சங்கள் ஒரு சில வருடங்களிலேயே பல கோடிகளாக மாறும்.
சகல அம்சங்களும் அமைந்த நல்ல நிலத்தை தேர்ந்தெடுத்து வாங்கி அதில் அழகான வீடு கட்டி மனநிறைவுடன் வாழ வாழ்வில் வளம்பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ஜெய்சன் பிரதீஷ்
Builder
Promoter
Loan Consultant
Loan Salvationist
Jaiho Infra
7338860995
www.inwisement.in