24/12/2022
*கிறிஸ்தவ மத போதகர்- மதம் பிடித்த மிருகமாக மாறி கொலை முயற்சி*
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு கிராமம் அம்பேத்கர் நகர் 5வது தெருவில் *வாழ்வின் வழி ரெகொபோத் சபை* நடத்திவரும் பாஸ்டர். ஜாபேஸ் பிரவின் ராஜ்* அவர்கள் தனது மாமனார், பாஸ்டர். பால் வீராசாமி அவர்களின் வழிகாட்டுதலில் வெளிநாட்டு வாழ் கிறிஸ்தவர்கள் கொடுக்கும் நன்கொடை மூலமாக திருச்சபை கட்ட முன்னெடுத்து அதற்கு கட்டிடம் கட்ட இடம் வேண்டிய சூழலில் தனக்கு சொத்து பிரிவாக வழங்கப்பட்ட நிலத்தில் ஒரு திருச்சபை கட்டி இரண்டு குடும்பங்கள் அதில் கலந்துக் கொள்கிறார்கள்.. இந்நிலையில் திருச்சபை கட்ட கூடுதல் இடம் தேவைப்படுவதால் தனது தங்கையான பிரவினா கெத்சியால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் தனது சொந்த தங்கையை உருட்டு கட்டையால் மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தி இருந்தனர்
ஒரு மத போதகர் இப்படி செய்வது சரியா?
இவர் சொல்லும் உபதேசம் எப்படி நியாயமானதாக இருக்கும்?
இப்படி எத்தனை போதகர்கள் வெளிநாட்டு பணத்திற்காக கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்?
இது தமிழக அரசின் கவனத்திற்கு வரவில்லையா?
இது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது...
அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதியில் திருச்சபை நடத்தும் இந்த திருட்டு போதகர். ஜாபேஸ் பிரவின்ராஜ் மீதும் அவருக்கு உறுதுணையாக கொலை செய்தும் நிலம் அபகரிப்பு வெளிநாட்டு பணம் பெற நினைக்கும் அவரது மாமனார் பாஸ்டர். பால் வீராசாமி அவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்குமா இந்த கிறித்தவ இயக்கமும், காவல்துறையும்...
மக்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்த திருச்சபை உடனே மூடப்பட வேண்டும்....
மக்கள் வாழும் பகுதிகளில் மத கலவரம் செய்யும் இந்த பாஸ்டர். ஜாபேஸ் பிரவின் ராஜ் மற்றும் பால் வீராசாமி உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க வேண்டும்... என்று நீதி கேட்டு வழக்கு பதிவு செய்து உள்ளோம். ஆனால் இதுவரை நீதி கிடைக்கவில்லை ???
*நீதி வேண்டி போராடுவோம்*
வேப்பம்பட்டு கிராமம் அம்பேத்கர் நகர் 5வது தெருவில் வசிக்கும் திரு. ஜார்ஜ் அவர்களின் மகள் *பிரவீணா கெத்சியால்* தனது அண்ணன் *பாஸ்டர்.ஜாபேஸ் பிரவின்ராஜ் * அவர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவரை தேடி வருகின்றனர்...
கடந்த 10 நாட்களாக தலைமறைவாக இருந்த பாஸ்டர்.ஜாபேஸ் பிரவின்ராஜ் இன்று மீண்டும் அவரது இல்லத்திற்கு திரும்ப வந்து அவருடைய தங்கை பிரவீனா கெத்சியால் அவர்களை கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்...
அவர் அரசியல் பிரமுகர்களக்கு பணம் கொடுத்து தன்னை கிரிமினல் வழக்கில் இருந்து விடுவித்து விட்டேன் இனி என்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தம்பட்டம் போட்டு வருகிறார்....
நமது பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கிடைக்கும் நீதி இது தானா???
இது குறித்து நாளை நாம் அனைவரும் ஒன்றினைந்து காவல்துறை ஆணையர் அவர்களிடம் புகார் மனு கொடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்டர்.ஜாபேஸ் பிரவினை கைது செய்ய வலியுறுத்தி நேரில் சந்தித்து பேச வேண்டும்...
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்...
உண்மையான போதகர்களை அவமான படுத்தும் மற்றும் கிருஸ்தவ மதத்தை இழிவு படுத்தும் இது போன்ற போலி போதகரை இனியும் விட்டு வைக்கலாமா?
வாருங்கள்,
இன்று (24.12.2022) காலை பொதுமக்கள் மனு அளிக்கும் நேரத்தில் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு பேரணி நடத்த இருப்பதால் மனசாட்சி உள்ள அணைத்து பொது மக்களும் வருமாறு நமது அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்...
மேற்படி இவ்வழக்கு குறித்து முதலமைச்சர் தனிப் பிரிவு, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், மற்றும் மாநில பெண்கள் ஆணையம் என பல்வேறு துறைகளில் மனு கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது...
அதின் வழக்கு எண் இந்த பதிவுடன் இணைத்து அனுப்புகிறோம்
முதலமைச்சர் உதவி மையத்தின் கோரிக்கை மனுவிண் எண்
TN/HOMEEXC/TLR/I/CMCELL/22DEC22/4804464-HOMEEXC துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது
இப்படிக்கு.
அம்பேத்கர் நகர் பொதுமக்கள் 87.வேப்பம்பட்டு