13/11/2022
ஒரு காலத்தில் விஜய், அஜித் இந்த இருவர் படத்தையும் தொடர்ந்து பார்த்தேன்
ஏன்னா, இந்த இருவரது படங்களிலும் தலைவர் ரெபரன்ஸ் நிச்சயம் இருக்கும்
அது அஜித்தின் அமராவதியில் ஆரம்பித்து விஜய்யின் போக்கிரி வரை தொடர்ந்தது
அதன்பிறகு அஜித், விஜய் நடித்த எந்த படங்களையும் நான் பார்ப்பதில்லை, பார்த்ததில்லை என்பதை விட பார்க்க பிடிக்கவில்லை என்பதே உண்மை
விஜய் பல படங்களில் தலைவர் பெயரை பயன்படுத்திருப்பார் உனக்கு முருகனை பிடிக்கும் ஆனா எனக்கு பாபாவை பிடிக்கும் என்று தலைவரின் பாபா சிம்பளை காண்பிப்பார்
பிரியமுடன் படத்தில் வரும் ஒரு பாடலில் இவன் பார்த்தா சின்ன ரஜினி தான் என்று ஒரு வரிகள் வரும், சரி இவனும் ரஜினி ரசிகன் தானே என்று அதையும் அனைத்து ரஜினி ரசிகர்களுமே பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டோம் விஜய், தலைவரின் உண்மை ரசிகனாக இருப்பான் என்று
ரஜினி ரசிகனாக இருந்த காலத்தில் விஜய் நடித்த அத்தனை படங்களையும் ரஜினி ரசிகன் விஜய்யை தூக்கி கொண்டாடினான், விஜய்க்கு இளைய தளபதி பட்டம் கொடுத்து அழகு பார்த்தவன் இந்த ரஜினி ரசிகன்
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, பிரியமுடன் போக்கிரி வரைக்கும் ஒழுங்காக தான் இருந்தான்
போக்கிரி படம் வரை நான் ரஜினி ரசிகன் என்று சொன்னவன் அதன்பிறகு நான் தான் அடுத்த ரஜினி என்று தானாகவே தம்பட்டம் அடித்து கொண்டு அடுத்த சூப்பர்ஸ்டார் நான் தான் என்று சூப்பர்ஸ்டார் பட்டத்தை காசு கொடுத்து அபரிகக்க முயன்ற கயவன் இந்த விஜய்
அதன்பிறகு தான் ஒவ்வொரு ரஜினி ரசிகர்கனுக்கும் விஜய்யை பிடிக்காமல் போனது, ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவன் இந்த விஜய்
சந்திரமுகி படத்துடன் போட்டியிட்டு சட்னி ஆனவன் இந்த விஜய்
என்ன தான் தலைவர் போல மேடையில் குட்டி கதை சொன்னாலும், தலைவரை காப்பி அடித்தாலும், தலைவர் போல நடந்தாலும், ஸ்டைல் பண்ணாலும் ஊர் குருவி பருந்தாகது
தலைவர் ரஜினிக்கு, அஜித் மீது ஒரு தனி பாசம் உண்டு அதனால் தான் அஜித் தொடர்ந்து தோல்வி படம் கொடுத்து கொண்டே இருந்த போது அவரை வீட்டிற்கு அழைத்து பில்லா படத்தில் நடிக்க வைத்து மேலே கொண்டு வந்து அவரது திரை வாழ்க்கைக்கு விளக்கு ஏற்றி வைத்தவர் இந்த ரஜினி
இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னா திரைத்துறை நல்லா இருக்கணும், நமக்கு அப்புறம் உள்ள நடிகர்கள் நல்லா வரணும் நினைக்குற ஒரே மனுஷன் இங்கு தலைவர் ரஜினி மட்டும் தான்
ஏறி வந்த ஏணியை மதிக்கா விட்டாலும் மிதிக்காமல் இருங்கள், அதுதான் உங்கள் இருவருக்கும் அழகு
இன்று சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு மற்ற நடிகர்கள் போட்டி போடுவது போல் என்னைக்கு உங்கள் பட்டத்திற்கு மற்ற நடிகர்கள் போட்டி போடுகிறார்களோ அன்று தான் நீங்கள் வெற்றியாளர்கள் அதுவரை ஓடிக் கொண்டே இருங்கள்
better dont come in thalaivar way
U. Salim Basha
பிஸ்மில்லா டிராவல்ஸ் & கன்சல்டிங்
8056685257
8072853283
7339591050