Housing Pvt Ltd

Housing Pvt Ltd Its a place for search a well and good places for construct your dream home.

குட்டிக்கதை:                                 ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள...
16/09/2015

குட்டிக்கதை:

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.

மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள் அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.

அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள் அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.

அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த,

வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.

அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் "அன்பு", அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டு்ம் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.

அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!!.............

Love is God.....

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்...
12/09/2015

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நாங்க சொல்லலைங்க ..!
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு   !!!!!!!!!!!!!!!.......  புதுடில்லி :வங்கிகளில், 2009 ஏப்., 1 ...
11/09/2015

கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு !!!!!!!!!!!!!!!.......

புதுடில்லி :வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், நேற்று(28-08-15) வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு, அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை, வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் அறிவிக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது.

இதையேற்று, அனைத்து வங்கிகளும், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, வங்கிக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி தள்ளுபடி அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மாணவர்களே வங்கிகளை அணுகி, வட்டி தள்ளுபடியைப் பெறலாம். இவ்வாறு, வங்கிகள் சங்கம் கூறியுள்ளது.

இதுகுறித்து, கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் கூறியதாவது: வட்டி தள்ளுபடி பெற, வங்கியில் மனு கொடுக்க வேண்டும். வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

******  ஆசியா கண்டத்திலேயே மிக உயரமான... மிக பிரமண்டமான குபேரன் கோயில் இது தான்.*****   ரிச் இந்தியா ஞாலேஜ் சிட்டியில் உ...
31/08/2015

****** ஆசியா கண்டத்திலேயே மிக உயரமான... மிக பிரமண்டமான குபேரன் கோயில் இது தான்.
***** ரிச் இந்தியா ஞாலேஜ் சிட்டியில் உள்ள பள்ளி கட்டிடத்தின் வளர்ச்சி பணிகள்.

Good Morning....
31/08/2015

Good Morning....

This not Singapore r DubaiThis is Delhi new railway station in India.share it proudly
28/08/2015

This not Singapore r Dubai
This is Delhi new railway station in India.share it proudly

Happy ONAM............
28/08/2015

Happy ONAM............

ஒரு கடையில் உங்களுக்கு பிடித்த கணவரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று போர்டு வைத்து இருந்தார்கள். அந்த கடையில் பெண்கள் கூ...
26/08/2015

ஒரு கடையில் உங்களுக்கு பிடித்த கணவரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம் என்று போர்டு வைத்து இருந்தார்கள்.
அந்த கடையில் பெண்கள் கூட்டம் அலைமோதியது!
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க. அது என்னன்னா???

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது .. அப்புடியே வெளிய தான் போக முடியும். இது தான் அந்த கடையின் விதிமுறை!!

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இரண்டாவது தளத்திற்கு மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறத நிரூபிக்கத் தான் # # #

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ..........
பார்த்து பத்திரமாக கீழே படியில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது..

*குறிப்பு : இதை படிக்கும் பெண்கள் Tension ஆககூடாது !!!

24/08/2015

நண்பர்களே.....
நெஞ்சை உருக்கிய கதை.

தலைப்பு:-
"""""""""""""""
இன்னும் சில நாட்கள்.....

காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
என்ன ஆயிற்று எனக்கு?
நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.

காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான். அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.

நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன். ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை. என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான். ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன். "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள்."நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை. "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!

திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!

Address

Kodambakkam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Housing Pvt Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share