R.பிரகாஷ் Real Estate

R.பிரகாஷ் Real Estate Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R.பிரகாஷ் Real Estate, Real Estate, B, Komarapalayam.

10/10/2024
மாநில அளவில்  #கோகோ விளையாட செல்லும்  வீரர்களை வெற்றி பெற வாழ்த்துவோம்ஐன்ஸ்டின் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பயின்று வ...
06/10/2024

மாநில அளவில் #கோகோ விளையாட செல்லும் வீரர்களை வெற்றி பெற வாழ்த்துவோம்

ஐன்ஸ்டின் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பயின்று வரும் சிவகுமார் லீலாவதி தம்பதியினர் மகன் சுனில் மற்றும் ரமேஷ் ரேவதி தம்பதியர் மகன் பசந்த் ஆகிய இருவர் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவில் கோகோ விளையாட்டுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மதுரை நடைபெறும் நாமக்கல் மாவட்ட குழுவில் இருவரும் இடம் பெற்று விளையாட செல்கின்றனர்.

அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக
#விடியல்_ஆரம்பம்_பவுண்டேஷன் சார்பாக தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் பஞ்சாலை சண்முகம், பரமன் பாண்டியன், சண்டே மார்க்கெட் உரிமையாளர் அங்கப்பன்,தீனா, ஆகியோர் வாழ்த்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் மற்றும் நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.

மேலும் Zonal Level கலந்துகொண்டு இந்த இரண்டு மாணவர்களும் ஷீல்டு மற்றும் டிராபி ரூபாய் 24 ஆயிரம் ரொக்க தொகை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

அன்பு தங்கங்களை வாழ்த்துங்கள்

தினகரன், காலைக்கதிர், தீக்கதிர், நாளிதழுக்கு மனமார்ந்த நன்றிகள்
25/09/2024

தினகரன், காலைக்கதிர், தீக்கதிர், நாளிதழுக்கு மனமார்ந்த நன்றிகள்

இன்று மகளிர்குழு கடன் பெற்றபெண்மணிகளும் காவல்ஆய்வாளர் திரு தவமணி  அவர்களும் கலந்தாய்வு (கவுன்சிலிங்)கூட்டம் குமாரபாளையம்...
23/09/2024

இன்று
மகளிர்குழு கடன் பெற்றபெண்மணிகளும் காவல்ஆய்வாளர் திரு தவமணி அவர்களும் கலந்தாய்வு (கவுன்சிலிங்)கூட்டம் குமாரபாளையம் பேருந்துநிலையம் அருகேயுள்ள இராஜாஜிகுப்பம் பகுதியில் நடந்தது..

குமாரபாளையம் நகரில் மகளிர்குழு கடன் என்ற பெயரில் மைக்ரோ ஃபைனான்ஸ், கந்துவட்டி போன்ற கடன்தொல்லைகளால் தற்கொலையும் முயற்சிகளும் தற்போது அதிகரித்து வருவதையொட்டி ...

குமாரபாளையம் அனைத்துபொதுநல அமைப்பு களத்தில் இறங்கி மைக்ரோ பைனான்ஸ் வசூல்பிரதிநிதிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்திட வேண்டிட நாமக்கல் மாவட்ட ஆட்சியர்,திருச்செங்கோடு கோட்டாட்சியர், பெண்கள் ஆணையம், மனிதஉரிமை ஆணையம், குமாரபாளையம் வட்டாட்சியர் குமாரபாளையம் காவல்ஆய்வாளரிடத்திலேயும் புகார்களை அனுப்பிய நிலையில்
தற்போது நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த
*குமாரபாளையம் காவல்ஆய்வாளர் திரு. தவமணி அவர்கள்*

கடந்தவாரம் மைக்ரோஃபைனான்ஸ் பிரதிநிதிகள் மேலாளர்களை காவல்நிலையம் வரவைத்து விசாரித்து மைக்ரோ பைனான்ஸ் பிரதிநிதிகளின் அடாவடியாலும் கேவலமான பேச்சுகளாலும் மனம்வெறுத்து உடையார்பேட்டையைச்சேர்ந்த ஒரு,பெண்மணியும் மேற்குகாலனி காந்தித்தெருவைச்சேர்ந்த ஒருபெண்மணியும் கடந்த வாரம் தூக்கமாத்திரையை தின்று தற்கொலைக்கு முயனர்..

பின் தீவிரமருத்துவஉதவியால் இருவரும் காப்பாற்றபட்டார்கள் பாதிக்கப்பட்ட இருபெண்மணிகளையும் அழைத்து விசாரத்துவிட்டு அதன்பின்னிட்டு ஆய்வாளர் அவர்கள் "கண்டிப்பாக மகளிர்குழுவைச்சேர்ந்த பெண்களுக்குத்தான் முதலில் நாங்கள் கவுன்சிலிங்தரவேண்டும் இனி நான்ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று பெண்களிடம் கலந்துரையாடுகிறேன்" எனகூறியவர் நேற்றே களத்தில் இறங்கினார்...

நேற்று முன்தினம் மேற்குகாலனி காந்திதெருவிலும் நேற்று உடையார்பேட்டையிலும்
பெண்கள் மத்தியில் அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டினார்
இன்று இரவு
குமாரபாளையம் பேருந்துநிலையம் அருகேயுள்ள இராஜாஜிகுப்பம் பகுதியில் கவுன்சிலிங் கொடுத்தார்

சுகாதார பணியாளர்கள் நிறைந்த அப்பகுதியில் அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு ஆளாக பேசியது அப்பகுதிமக்களுக்கு பேராறுதல்

"பெண்களை கேவலப்படுத்தி அடாவடி செய்து வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் வசூலிப்பாளர்களை கண்டு யாரும் பயப்படாதீர்கள்
கஷ்ட காலங்களில் வாங்கிய பணத்தை அவசியம் திருப்பிதந்துவிடுங்கள் இன்று இல்லையா நாளை தாருங்கள் நாளை இல்லையா அடுத்தவாரம் தருவதாக கூறுங்கள் அதைமீறி வசூலிப்பவர்கள் அடாவடிசெய்தால் என்னிடம் வாருங்கள் ஒரு அண்ணனாக உங்களுக்கு சட்டபடி என்னால் என்ன செய்யமுடியுமோ அதைச்செய்கிறேன் அதைவிடுத்து வேறு எந்த தவறான முடிவும் நீங்களோ உங்களைச்சேர்ந்தவர்களோ எடுக்ககூடாது குமாரபாளையத்தில் இனி ஒரு உயிரும் கந்துவட்டியாலும் மகளிர்குழுகடானாலும் இழக்ககூடாது என்பதில் காவல்துறை மிகஉறுதியாக இருக்கிறது" என்று கூடியிருந்த அனைத்து பெண்களிடம் ஆய்வாளர் தவமணி அவர்கள்,பேசினார் முதலில் இறுக்கமான,முகத்தோடு வந்தமர்ந்த பெண்கள் முடிவில் தன்னம்பிக்கை ஏற்படுத்திய ஆய்வாளருக்கு கைகொடுத்து தங்கள் மகிழ்ச்சி பகிர்ந்துகொண்டனர்..

இந்த கவுன்சிலிங்கூட்டத்தில் காவல்உதவி ஆய்வாளர் தங்கவடிவேல் அவர்களும் கலந்துகொண்டார்..

அனைத்துபொதுநல அமைப்பினர்கள் "பஞ்சாலை" சண்முகம், கே.ஏ.இரவி,
விடியல் பிரகாஷ்
கவுன்சிலர் தீபாவிஸ்வநாதன் மதிமுக எம்.விஸ்வநாதன்,
தி.க.சரவணன், எம்.எல்.நிர்வாகி ல.மா.செல்வராசு, மகேந்திரன்,ரஜினி, ஈஸ்வரன்,
வை.கணேசன், சரவணன் அப்பகுதிபொதுமக்கள் மகளிர்குழுக்கள் பங்குபெற்றனர்..

வருகின்ற 20.09.2024 வெள்ளிக்கிழமை முதல் வகுப்பு தொடக்கம் வாருங்கள்98659 49000
18/09/2024

வருகின்ற 20.09.2024 வெள்ளிக்கிழமை முதல் வகுப்பு தொடக்கம் வாருங்கள்
98659 49000

 ோன்_தினம்குமாரபாளையத்தில் புத்தர் வீதியில் மாணவ மாணவிகளுக்கு உலக ஓசோன் தினத்தில் உறுதி மொழியும் பொதுமக்களுக்கு விழிப்பு...
17/09/2024

ோன்_தினம்

குமாரபாளையத்தில் புத்தர் வீதியில் மாணவ மாணவிகளுக்கு உலக ஓசோன் தினத்தில்
உறுதி மொழியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்
#விடியல்_ஆரம்பம்_பவுண்டேஷன் சார்பாக வழங்கப்பட்டது.

மேலும் ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பரிசு புத்தகங்களை விடியல் பிரகாஷ் வழங்கி வழங்கி உலக ஓசோன் தினத்தை பற்றி விளக்கம் அளித்தார், மற்றும் சுற்றுச்சூழல் எவ்வாறு காப்பாற்றப்பட வேண்டும் என மாணவர்களிடையே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இனிய விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ராணி, சித்ரா, ஜமுனா, மற்றும் தீனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாணவ மாணவிகளுக்கு  #விடியல்_ஆரம்பம்_பவுண்டேஷன் சார்பாக  ுத்தறிவு_தினம் கொண்டாடப்பட்டது.இதில் மாணவ மாணவிகளுக்கு எழுத்துப்...
09/09/2024

மாணவ மாணவிகளுக்கு
#விடியல்_ஆரம்பம்_பவுண்டேஷன் சார்பாக ுத்தறிவு_தினம் கொண்டாடப்பட்டது.

இதில் மாணவ மாணவிகளுக்கு எழுத்துப் போட்டி வைக்கப்பட்டு நன்றாக எழுதிய மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகங்களும் சுமாராக எழுதிய மாணவ மாணவிகளுக்கு பயிற்சி நோட்டுகளும் விடியல் பிரகாஷ் வழங்கினர்.

மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன.

இதையடுத்து, 1965ம் ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும் அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கைகளையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது.

இதையடுத்து, 1966ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி நடத்திய யுனெஸ்கோவின் 14வது பொதுக்குழுவில்,

எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, 1967ம் ஆண்டு முதல் ஒவ்வொரகொண்டு ்டும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. என்ன மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இனிய நிகழ்வில் தீனா, பால்ராஜ், ராமகிருஷ்ணன், சித்ரா, ஜமுனா, லட்சுமி நாராயணன், மகேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சேவை பணியில்
விடியல் ஆரம்பம் பவுண்டேஷன்

மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி  #மாவீரர்பூலித்தேவன்  ஐயா பிறந்தநாள் மற்றும்  ிதம்_தினம் விடியல் ஆரம்பம் பவுண்...
01/09/2024

மாணவ மாணவிகளுக்கு சுதந்திர போராட்ட தியாகி #மாவீரர்பூலித்தேவன் ஐயா பிறந்தநாள் மற்றும்
ிதம்_தினம் விடியல் ஆரம்பம் பவுண்டேசன் சார்பாக கொண்டாடப்பட்டது.

மாவீரர் பூலித்தேவர் வரலாற்றை ஜமுனா சிறப்பாக எடுத்துரைத்தார்கள்

உலக கடிதத் தினம் இன்று தபால் அட்டை மற்றும் எழதுகோல் மாணவ மாணவிகளுக்கு வழங்கி கடிதம் எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது .

இன்றைய கம்ப்யூட்டர் உலகில் கடிதம் எழுதுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனை அடுத்து இன்றைய காலத்தில் கடிதம் எழுதினால் அனைவரும் போற்றிக் கொண்ட வேண்டும் என்று விடியல் பிரகாஷ் பேசினார்.

இனிய விழாவில் மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரை போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தீனா &
ரூத்பிரியங்கா பரிசு வழங்கினார்.

குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் தலைவர் விடியல் பிரகாஷ்  தலைமையில் வாசிப்பை நேசிப்போம் என்ற த...
28/08/2024

குமாரபாளையம் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் தலைவர் விடியல் பிரகாஷ் தலைமையில் வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எழுத்தாளர்கள் நாகு அன்பழகன்,
கேசவ மூர்த்திராஜகோபாலன்,
கவிஞர் குமரேசன், மற்றும் பங்கஜம் ஆசிரியர் தங்கள் எழுதிய புத்தகங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்கள்.

மேலும் கூட்டத்தில்
வாசிப்பின் முக்கியத்துவம், அதை எப்படி மேம்படுத்துவது, எப்படி பொதுமக்களை நூலகத்தின் பயன்களை பெற வைப்பது,மிக முக்கியமாக எவ்வாறு இன்றைய இளைய மாணவர் சமுதாயத்தை டிஜிட்டல் உலகில் மொபைல் போன், எலக்ட்ரானிக் மீடியாவில் சிக்கி உள்ள வர்களை வாசிப்பின் பக்கம் திருப்புவது போன்ற பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

மேலும் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இறுதியில் மருத்துவர் சண்முக சுந்தரம் நன்றி உரையாற்றினர்.

கூட்டத்தில் ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, அந்தோணிசாமி, முனைவர் சண்முகம், கிளை நூலக வாசகர்கள் கேஏ ரவி, பகலவன்ரவி, கண்மணி,அபெக்ஸ் பன்னீர், ஜெகதீஸ்வரி, பன்னீர்செல்வம், ரூத், ஜமுனாராணி, தீனா, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

https://chat.whatsapp.com/F7bJF5TvBCY0tQMnL2N5Hcவாசக நண்பர்களுக்கு வணக்கம். 🙏நம் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின...
24/08/2024

https://chat.whatsapp.com/F7bJF5TvBCY0tQMnL2N5Hc

வாசக நண்பர்களுக்கு வணக்கம். 🙏

நம் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத்தின் முதல் கூட்டமானது வருகின்ற 25. 8. 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இக்கூட்டத்தில் *"வாசிப்பை நேசிப்போம்"* என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெற இருக்கிறது.

கூட்டத்திற்கு நம் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விடியல் இரா. பிரகாஷ்
தலைவர்,
கிளை நூலக வாசகர் வட்டம்,
குமாரபாளையம்,
98659 49000
👏👏

Address

B
Komarapalayam
638183

Telephone

+919865949000

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.பிரகாஷ் Real Estate posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category