M.R.S Builders & Promoters Meensurutty

M.R.S Builders & Promoters Meensurutty M.R.S Promoters is well recognised for its quality residential projects in meensurutty surrounding.

Meensurutty surroundings land buying or selling  contact M.R.S.MITHUN.ME 9787570505
30/09/2024

Meensurutty surroundings land buying or selling contact M.R.S.MITHUN.ME 9787570505

09/08/2023
Prime plot (4cent)for sale in  meensurutty North street near by ghs school boys, police station contact me Er M.R.S.MITH...
30/05/2023

Prime plot (4cent)for sale in meensurutty North street near by ghs school boys, police station contact me Er M.R.S.MITHUN 9787570505

27/04/2022

Meensurutty main road 4 homes,2shops total area of land 31cent for sale budget 3crores contact 9787570505

27/04/2022
06/05/2020

வீடு கட்டும் எல்லோருக்கும் குழப்பமாய் இருக்கும் மற்றொரு விஷயம் இந்த கம்பி விஷயம் தான்.
கட்டிடத்திற்கு எப்படி சிமெண்ட், மணல், செங்கல் போன்றவற்றின் தரம் முக்கியமோ அதேபோல் கம்பியின் தரமும் முக்கியம்.

கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தும் கம்பிகளில் மூன்று வகை உண்டு, ஒன்று

*சாதாரண கம்பி,
* இரண்டு முறுக்கு கம்பி.
* மூன்றாவது TMT முறுக்கு கம்பி

சாதாரண கம்பி.

சாதாரண கம்பி என்றால் ஆரம்ப காலங்களில் அதாவது கான்க்ரீட் உபயோகப்படுத்த ஆரம்பித்த காலங்களில் வெறும் உருட்டு கம்பிகளே உபயோகப்படுத்த பட்டது அதுவே சாதாரண கம்பி என்பார்கள். இப்போதும் ஜன்னல்கள் அல்லது வென்டிலேட்டர்களில் குறுக்கே உருட்டு கம்பிகள் உபயோக படுத்துகின்றோமே அந்த மாதிரி கம்பிதான்.

முறுக்கு கம்பிகள்.
நாம் சாதாரணமாக ஒரு துணியை கயிறாக பயன்படுத்த வேண்டி இருந்தால் என்ன செய்வோம் அதை ஒரு முறுக்கு முறுக்கி அதனை பலப்படுத்துவோம் தானே அதேதான் நமக்கே தெரியுமல்லவா சாதாரணமாக துணியை நாம் பயன்படுத்தினால் அதன் டெம்பர் குறைவு என்பது அதே விஷயம்தான் கம்பியில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது முறுக்கு கம்பி. இது சாதாரண கம்பியை விட அதிக வலுவானது.



TMT முறுக்கு கம்பிகள்.
முறுக்கு கம்பியை சூடு பண்ணி உடனடியாக குளிர்வித்து வலுவூட்டப்படும் கம்பியே TMT கம்பி (Thermo-Mechanically Treated Bars). இது முறுக்கு கம்பியை இன்னும் வலுவாக்கி தருகிறது. இதன் மூலம் நமது கம்பி பயன்பாட்டை 17% வரை குறைக்கிறது.

இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன கம்பியை உபயோக படுத்த வேண்டும் என்று.

இன்னும் சில விஷயங்கள் :
இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு ISO அமைப்பு கம்பிகளின் தரத்தையும் நிர்ணயித்துள்ளது. Fe415, Fe500 என்ற பிரிவுகளை கட்டுமானத்திற்கு என்று நிர்ணயித்து உள்ளது.



Fe415 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 415 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும்,



ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன்



415/ 9.81 = 42.3 Kgf /சதுர மில்லிமீட்டர் (கிலோகிராம் இழுவிசை)



Fe415 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 42.3 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.



அதேபோல்



Fe500 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 500 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும்,



ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன்



500/ 9.81 = 50.97 Kgf /சதுர மில்லிமீட்டர் (கிலோகிராம் இழுவிசை)



Fe500 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 50.97 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.



நாம் கம்பியில் பார்க்கும் 500 என்ற குறியீடு இந்த Fe500 என்ற அளவையே குறிக்கிறது.



சரி அது என்ன 500 D ?


Fe500 குறியீடு கம்பியையே சில சிறப்பு தரம் கூட்டப்பட்டு வருபவையே இந்த 500D என்ற வகை கம்பி அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

சாதாரணமாக Fe500 வகை கம்பிகளில் கார்பன் அளவு 0.30 சதவிகிதம் இருக்கும் அதுவே 500Dயில் கார்பன் அளவு 0.25 சதவிகிதமே இருக்கும். அதேபோல் சல்பர் அளவு 500ல் 0.055 சதவிகிதம் மற்றும் 500Dல் 0.040 சதவிகிதம்.
M.R.S.mithun me. ,Meensurutty.

24/04/2020

வீடு கட்ட திட்டமிட்டிருக்கும் குடும்பங்களின் கவனத்திற்கு:-

தற்போதைய ஊரடங்கால் கட்டுமான தொழில் மற்றும் கட்டுமான பொருட்கள் உற்பத்திகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் சந்தைகளின் தேவைகளை பொறுத்து கட்டுமான பொருட்களின் விலை ஏறும் என்ற கணிப்பு பரவலாக உள்ளது,விலை குறைய 6மாத முதல் 12மாதங்கள் வரை ஆகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது,இத்தகைய சூழலில் சரியான செலவிட்டில் தங்கள் இல்லத்தினை முழுமையாக முடித்திட பொறியாளர்களால் மட்டுமே முடியும்,ஏனென்றால் அவர்களால் மட்டுமே தங்கள் இல்லதிற்கு தேவையான கட்டிட பொருட்களின் அளவினை (Required Quantity ) கணக்கீட்டு அதற்கேற்ப செலவு தொகையினை மதிப்பீடு (Estimation) செய்ய முடியும்.வரும்காலங்களில் செலவு அதிகரிக்கும் என்பதால் தேவையற்ற பொருட்கள் விரயம் ஆகுவது மற்றும் அதிகபடியாக பொருட்கள் மீதம் ஆகுவதையும் தவிர்ப்பது நல்லது...

எனவே வீடு கட்ட திட்டமிட்டிருப்போர் பொறியாளர்களிடம் கலந்து ஆலோசித்து
✏️Contract Agreement (ஒப்பந்த பத்திரம்)
✏️Plan Drawing (வரைபடம்)
✏️Estimation(Detailed & Abstract) (மதிப்பீடு) தயார் செய்து கொள்ளுங்கள்...

உங்கள் கனவு இல்லம் விரைவாக அமைந்திட வாழ்த்துக்களுடன் நன்றி...
M.R.S.MITHUN mE

08/04/2020

ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா?
ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன?
வீடு கட்டுபவர்கள் லின் கணிப்பு இதுவே:
1. நல்ல பெரிய கம்பியை போட்டு 12mm, 10mm, அதிக இடைவெளி இல்லாமல் கம்பி கட்டவேண்டும்.
கம்பியின் இடைவெளியை குறைத்து தடிமனான கம்பியை போட்டு கட்டினால் ரூப் வலுவாக இருக்கும் என்பது முற்றிலும் தவறு மற்றும் ஆபத்தானது.

இந்திய தர ஆணையம்(Indian Standards) இது குறித்து சொல்வது என்ன.

நாம் ரூப் ஓட்டுவது RCC வைத்து தான். அதாவது reinforced cement concrete(கம்பியுடன் மற்றும் கான்கிரீட்). இதில் இரண்டு பொருட்கள் இணைகின்றன.

கான்கிரீட் என்பது ப்ரீ டில்(Brittle) தன்மை கொண்டது.
அதாவது பிஸ்கட்டை போல உடயும் தன்மை கொண்டது.

கம்பி வலயும் தன்மை(Ductile) கொண்டது. ஒரு கம்பியை இரண்டாக உடைக்க குறைந்தது 10-15 முறை வளைத்து நிமிர்த்த வேண்டும்.
இதை டக்டில் தன்மை என்று கூறப்படுகிறது.

ஒரு ரூப் தன் வலுவை இழந்து failure ஆகும் பட்சத்தில் முதலில் கம்பி failure ஆக வேண்டும். அப்போதுதான் வீட்டினுள் இருப்பவர்கள் தப்பித்து வெளியேற கால அவகாசம் கிடைக்கும். ஏனெனில் கம்பி உடனே உடையாது. வளைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்தான் உடையும்.

நீங்கள் கம்பியை வலுவாக போடு போடு என்று போட்டு கட்டும்போது ஆவது என்னவென்றால் ஓவர் reinforcement.(Over Reinforcement) அதாவது தேவைக்கு அதிகமாக.

ஓவர் reinforcement ஆகும்போது, ஒரு பூமி அதிர்ச்சி அல்லது ரூப் வலுவிழப்பு ஏற்பட்டால் கம்பி வலுவாக நிற்கும் ஆனால் கான்கிரீட் fail ஆகிவிடும். Concrete fail ஆகி விழும்போது, உள்ளே இருக்கும் மனிதர்கள் தப்பிக்க கால அவகாசம் இருக்காது. ஏனெனில் கான்கிரீட் பிரிடில் தன்மை கொண்டது. பிஸ்கட்டை போல உடையும்.

இதனால் தான் எப்பொழுதும் கம்பி(ஸ்டீல் failure) முதலில் failure ஆக வேண்டும் ரூப் வலுவிழக்கும் பொழுது.

இதனால் ரூப் rcc எப்பொழுதும் under reinforced or balanced section ஆக டிசைன் செய்ய வேண்டும். இது உங்களுக்கு லாபம் மட்டும் அல்ல. இதுவே பாதுகாப்பும் கூட. இதற்கு கண்டிப்பாக ஒரு ஸ்ட்ருச் சுறல் அணுகி முறையான structural வரைபடம் பெற்று அல்லது அவரின் மேற்பார்வையில் கம்பி கட்டுதல் மிகவும் அவசியம்.

ஒரு structural engineer வைத்து உங்கள் கனவு வீட்டை மற்றும் கட்டிடங்களை வலுவாகவும் அழகாகவும் கட்ட அணுகவும்

என்ஜினீயர்M.R.S.mithun M.E
Civil engineer
கட்டிட வல்லுநர்
Meensurutty
612903
9787570505

Our new site in kuyttakarai
14/06/2019

Our new site in kuyttakarai

Address

Mani Complex
Meensurutty
612903

Opening Hours

Monday 4pm - 9pm
Tuesday 4pm - 9pm
Wednesday 4pm - 9pm
Thursday 4pm - 9pm
Friday 4pm - 9pm
Saturday 8am - 9pm
Sunday 8am - 9pm

Telephone

+919787570505

Website

Alerts

Be the first to know and let us send you an email when M.R.S Builders & Promoters Meensurutty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category