Tamilnadu real estate owners

Tamilnadu real estate owners TAMILNADU REAL ESTATE OWNERS

FAIRA meeting yesterday vadapalani Chennai
30/12/2020

FAIRA meeting yesterday vadapalani Chennai

14/07/2016
23/05/2016

பத்திரப்பதிவில் நவீன தொழில்நுட்பம்:தேர்தல் வாக்குறுதி விரைவில் அமல்

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சார் பதிவாளர் அலுவலகங் களில் பத்திரப்பதிவை எளிமைப்படுத்த, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய திட்டம், விரைவில் அமலுக்கு வர உள்ளது.

அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு எளிமைப் படுத்தப்படும்; நிபுணர் குழு பரிந்துரை அடிப்படையில், வழிகாட்டி மதிப்பு தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 'தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்' என்றார். இதற்கான, முதற்கட்டப் பணிகள் துவங்கியுள்ளதாக, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகம் முழுவதும் உள்ள, 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும், பத்திரப்பதிவு பணிகளை எளிமையாக்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றும் திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில், பதிவுக்கு வரும் சொத்து குறித்த விவரங் களின் உண்மை தன்மை, விற்பவர், வாங்குபவர் குறித்த உண்மை விவரங்கள் தனியார் நிறுவன உதவியுடன், சில நிமிடங்களில் சரி பார்க்க முடியும்.

கை விரல் ரேகையை பதிவு செய்து, சார் பதிவாளர் ஒவ்வொரு பத்திரப்பதிவையும் உறுதி செய்ய வேண்டும். இந்த மாதிரி திட்டம், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் சோதனை முறையில் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், 578 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

21/07/2015
தொட்ட சுருங்கி தொட்டு பார்க்கவும் ...
23/05/2015

தொட்ட சுருங்கி தொட்டு பார்க்கவும் ...

23/02/2015

ஒரு இளம் தம்பதி...
மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந் தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.
ஏனோ
வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.
ஆளில்லாத வனாந்திரம், மான்களும்
மயில்களும் குயில்களின் இசையோடு
விளையாடிக் கொண்டிருந்தன.
ஆனால் அவர்கள் மனம் அதில்
லயிக்கவில்லை...
இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி
இருந்த பாறையில் ஏறினர்.

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி
கரங்களைப் பற்றிக் கொண்டனர்.
வனக்குரங்குகள் மரங்களிலிருந்து
இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...

அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.
இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது
மலையிலிருந்து மிகப் பெரிய பாறை
விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் தப்பவில்லை!
இவர்கள் இருவரைத் தவிர...
பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.
குயிலோசை இல்லை!
மான்களும் மயில்களும் ஒடுங்கி
நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி
ஓடின.

இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி
இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து
இறங்கி இருக்காமல்
பயணித்திருந்தால்...
சில நிமிடங்களுக்கு முன்னரே
பேருந்து
அந்த இடத்தைக் கடந்திருக்கும்.
பாறை விழும் பேராபத்தில் இருந்து
அனைவரும் தப்பி இருப்பார்கள்.
எதிர்மறையான சிந்தனை
உங்களுக்குத் தோன்றி இருந்தால்...
நீங்கள்
நேர்மறையாக
சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

Address

Mylapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu real estate owners posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share