13/03/2023
*மதுரை பள்ளிக்கூடம் ஒன்றினால் பெற்றோ ருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் ஒன்று,,,***
*அன்பார்ந்த பெற்றோர்களே!*
****உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.****
****பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.****
****எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.****
****தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்****
****ஒரு கலைஞன் இருப்பான்****
****அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.****
****ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிறாது.****
****ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.****
****பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..****
****எடுக்காவிட்டால் எடுக்காவிட்டால் தரம் குறைந்த மாணவன என்று****
****தயவு செய்து அவர்களது தன்நம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.****
****அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.****
****நீ வாழ்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.****
****உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.****
****என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.****
****வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.****
****மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.****
****உங்களுக்கும் பிள்ளைகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள்.*