04/09/2026
04/09/2026
🧅 “ரூ.35-க்கு வெங்காயமா? எல்லா ரேஷன் கடைகளிலும் கிடைக்குமா?” — ராமநாதபுரம் மக்களுக்கு ஏமாற்றம்!
வெளிச்சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு கிலோ ரூ.35-க்கு பல்லாரி வெங்காயம் விற்பனையை தொடங்கியுள்ளது.
ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆரம்பமே குழப்பமும் ஏமாற்றமுமாக அமைந்துள்ளது.
📍 முதல் கட்டமாக 72 ரேஷன் கடைகளில் மட்டுமே வெங்காயம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கடைகளில், ஒரு ரேஷன் கார்டுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35-க்கு வழங்கப்பட்டது.
ஆனால் பிரச்சினை இங்கேதான்👇
ஒரு ரேஷன் கடையில் 700 முதல் 900 கார்டுதாரர்கள் இருக்கும் நிலையில், சில கடைகளுக்கு 400 முதல் 600 கிலோ மட்டுமே வெங்காயம் வந்துள்ளது.
இதனால் இருப்பு இருக்கும் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
வெங்காயம் வாங்க வந்த பலர், “வெங்காயம் தீர்ந்துவிட்டது” என்ற பதிலுடன் ஏமாற்றத்தோடு வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
விபரம் தெரியாமல் சில இடங்களில் விற்பனையாளர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
❗ மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
👉 கடையில் உள்ள ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவு வெங்காயம் வழங்க வேண்டும்.
👉 நகர்ப்புற மக்கள் மட்டுமின்றி கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும்.
👉 குறிப்பாக, ஒரே மாவட்டத்தில் சில ரேஷன் கடைகளில் மட்டும் கிடைப்பதால் ஏற்படும் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளின் தகவலின்படி, தற்போது கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கட்டுப்பாட்டில் உள்ள கடைகளில் இந்த விற்பனை இல்லை.
மேலும், ஏற்கனவே விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கும் அடுத்தடுத்த நாட்களில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🧅 விலை குறைந்தால் மட்டும் போதுமா?
வாங்க நினைக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டாமா?
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் போதுமான அளவில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
#ராமநாதபுரம் #ரேஷன்கடை #வெங்காயம் #பல்லாரிவெங்காயம் #தமிழ்நாடு