AAA Housing and Properties

AAA Housing and Properties Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AAA Housing and Properties, Real Estate, 2/150 F 5 Srinivasa Nagar, Sivakasi.

வீடு கட்டும் போது மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையில் வீட்டை ஒருவரிடம் ஒப்படைத்தால் சதுர அடியில் சேராத இதர செலவுகள் எக்ஸ்ட்ர...
11/03/2026

வீடு கட்டும் போது மொத்த காண்ட்ராக்ட் அடிப்படையில் வீட்டை ஒருவரிடம் ஒப்படைத்தால் சதுர அடியில் சேராத இதர செலவுகள்

எக்ஸ்ட்ரா வேலை"

என கணக்கிடப்படும்.

அந்த இதர வேலைகள்:

1.மின் இணைப்பு EB
2.போர்வெல் மற்றும் மோட்டார் பம்ப்
சம்ப்
3.பேஸ்மெண்ட் ஹைட் அதிகமானால்
4.ரூப் அளவு வீட்டின் அளவை விட வெளியே நீட்டினால்
5.லோ ரூஃப் எனப்படும் ஸ்டோரேஜ் ஏரியா
6.ரூப் ஹைட் அதிகமானால்
செப்டிக் டேங்க்
7.படிக்கூண்டு Headroom
8.சேஃப்டி கேட்
9.செப்டிக் டேங்க் septic tank
10.மொட்டை மாடியில் போடப்படும் கூலிங் டைல்ஸ்(optioal)
11.காம்பவுண்டு
12 பால்ஸ் சீலிங் false ceiling&
இன்டீரியர் வேலைகள்

13.சைட்டின் தன்மைக்கு ஏற்ப செய்யப்படும் ஸ்பெஷல் டெக்னிக்கல் வேலைகள் உதாரணமாக பிட்டு பிக்ஸ் எனப்படும் தார் பெயிண்ட் மற்றும் வாட்டர் ப்ரூபிங் போன்ற வேலைகள்

மற்றும் அக்ரீமெண்டில் கூறப்பட்டுள்ள வேலையை தவிர்த்து எக்ஸ்ட்ரா வேலை செய்தால் எக்ஸ்ட்ரா செலவு ஆகும்

இது போன்ற எக்ஸ்ட்ரா செலவுகளின் குழப்பங்களை தவிர்க்க வேலையை கொடுப்பதற்கு முன்பாகவே அக்ரீமெண்டில் தெளிவாக அனைத்தையும் எழுதிக் கொள்ளுங்கள்.

மழைக் கால முன்னெச்சரிக்கை!@@வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்...i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் ப...
17/11/2025

மழைக் கால முன்னெச்சரிக்கை!
@@
வீட்டில் மின் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம்...

i) எர்த் லீக்கேஜ் சர்க்யூட் பிரேக்கர் ஒவ்வொரு வீட்டிற்கும் அவசியம், செலவு பாராமல் வைக்க வேண்டும்.

ii) வீட்டிலுள்ள வீணாய் போயுள்ள, பழைய சுவிட்சுகளை அவசியம் மாற்றிவிட வேண்டும். தரமான சுவிட்ச்களை வாங்கிப் பொருத்த வேண்டும்.

iii) தண்ணீர் ஏற்ற வைத்துள்ள மோட்டர் சுவிட்ச் போர்ட், வாஷிங் மிஷின், ஃபிரிட்ஜ் கீழே ரப்பர் மேட் போட்டுக் கொள்வது பாதுகாப்பானது.

iv) எந்த சுவிட்சை இயக்கும் போதும் இடது கையை பின்புறத்தில் கட்டிக் கொண்டு, வலது கை சுட்டு விரலால் மட்டுமே இயக்க வேண்டும், இதயம் இடது புறத்தில் உள்ளதால்.

v)பாத்ரூம் சுவிட்ச் போர்டின் மேல் ஒரு பழைய டூத் பிரஷ் வைத்துக் கொண்டு, அதனால் சுவிட்சைப் போடுவதே பாதுகாப்பானது.

vi) மழைக் காலம் வாட்டர் ஹீட்டர் அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருப்பதால், அதன் விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மும்பையில், ஒரு நடிகை ஹீட்டர் நீரில் குளிக்கும் போது, மின் ஷாக் அடித்து இறந்து போனது அறிந்திருப்போம். தண்ணீர் இல்லாததால், ஹீட்டர் எலிமெண்ட் உருகி, மின்சாரம் பாய்ந்து அந்த நடிகை இறந்து போயிருக்கிறார்.
ஹீட்டருக்கு கொடுக்க கூடிய இன்லெட், அவுட்லெட் ஏதும் மாறவே கூடாது. எதிலும் கண்ட்ரோல் வால்வ் வைத்துவிடக் கூடாது.
அவுட்லெட் , ஹாட் வாட்டர் டேப் வழியாக தண்ணீர் வருவதை உறுதி செய்து கொண்ட பின்னரே,
ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ண வேண்டும். ELCB இம்மாதிரி சமயங்களில் நம்மைக் காப்பாற்றும். ஹீட்டர் சுவிட்சை டவல்/துடைக்கும் துண்டை வைத்து ஆஃப் செய்தால் ஈரக்கையோடு சுவிட்சை தொடுவதிலிருந்து தப்பித்து விடலாம்.

vii) பொதுவாக வாட்டர் ஹீட்டருக்கு சாதாரண சுவிட்ச் தான் வைத்திருப்பார்கள். அதற்குப் பதிலாக எம்சிபி வைத்தால், ஹீட்டரில் ஏதாவது ஷார்ட் சர்க்யூட் ஆகும் போது ட்ரிப் ஆகி நம்மை காக்கும். எப்போதும், சுடு நீர் தயார் பண்ணிவிட்டு, MCB ஐ ட்ரிப் பண்ணிவிட்டு குளிக்கப்போவதே நல்லது. இதே போல,வெட் கிரைண்டருக்கும் எம்சிபி பொருத்திக்கொள்வதே நல்லது.

viii) ஈர மின் சாதனங்களான வாஷிங் மெஷின், கிரைண்டர் போன்றவற்றைக் கையாளும் போது, சுவிட்ச்சை ஆஃப் பண்ணாமல் ஈரத் துணிகளை எடுப்பதோ, மாவை அள்ளுவதோ கூடவே கூடாது.

ix) இவ்வளவு கவனமாக இருந்தும்,
ஆக்சிடெண்டலாக ஷாக் அடிக்க நேர்ந்தால், நேர்ந்து விட்டால்,
அருகிலுள்ளவர் ஒரு கம்பால் அல்லது துடைப்பக் கட்டையால்
பாதிக்கப் பட்டவரின் கையை அடிக்க வேண்டுமே அன்றி, பாதிக்கப்பட்டவரை நேரடியாக தொடவே கூடாது.

கிரைண்டரில் ஷாக் அடித்த மருமகளையும், பேத்தியையும் காப்பாற்ற அவர்களை தொட்டு இழுத்து , இறந்து போன மாமியாரையும், பல வருடங்களுக்கு முன்பு, திருநெல்வேலி அருகே, இன்சுலேஷன் பாதிப்படைந்த சர்வீஸ் லைன் மேல் பட்டு கீழே வீழ்ந்து கிடந்த டிவி ஆண்டெனாவைத் தொட்ட ஒரு மனைவியைக் காப்பாற்றப் போன கணவன் தொடர்ந்து தொட்ட மகன், மகள், உறவினர்களென்று கிட்டத்தட்ட ஏழு பேர் ஒரே நேரத்தில் இறந்து போனதையும் மறக்கவே கூடாது. இம்மாதிரியான நேரங்களில் உணர்ச்சி வசப்படாமல், அறிவு பூர்வமாக செயல்பட வேண்டும். செருப்பு இதற்கு நல்ல ஸேஃப்டி டூல். அதனால், அடித்துக் கூட காப்பாற்றலாம்.

வீடென்றால் தொடப்பக்கட்டை.. வெளியே என்றால் செருப்பு..

எளிதாகக் கிடைக்கும் என்பதற்காகத் தான், வேறொன்றுமில்லை
(ஷாக் அடித்தால் தான்.. சும்மா இருக்கும் போது அடித்து வம்பிழுக்க வேண்டாம்). தண்ணீரில் வீழ்ந்தவரைக் காப்பாற்றப் போய் தானும் உயிர் விடற மாதிரி ஆகிவிடக் கூடாதல்லவா?

x) கைக் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு மின்சாதனங்களைத் தொடவே கூடாது. குழந்தைகளுக்கு எட்டும்படியாக சுவிட்ச் பாக்ஸ் வைக்கக் கூடாது.

xi) சிங்கிள் பேஸ் சப்ளை வைத்திருப்போர், இரு முனை அயன்கிளாட் சுவிச்சும், 3 பேஸ் சப்ளை வைத்திருப்பவர்கள் 4 முனை சுவிட்ச்சும் வைத்திருக்க வேண்டும்.
நியூட்ரலில் லின்க் போட்டிருக்க வேண்டும்; ஃப்யூஸ் போடக் கூடாது.
நியூட்ரல் கிரவுண்டிங்கை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

xii) நமது வீட்டில் பொருத்தியுள்ள UPSக்கு மின்வாரிய நியூட்ரலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றோம். மின்சாரம் இல்லாத போது நமது UPS மூலம் நமது மின் சாதனங்கள் இயங்கும்போது, அவையேதும் ஃபால்ட்டானால், நியூட்ரல்/ எர்த் வழியாக மின்கம்பத்திற்கு மின்சாரம் வந்து சில மின் ஊழியர்கள் இறந்துள்ளனர். ஆகவே நாம் UPS ல் உள்ள நியூட்ரலை பயன்படுத்திக் கொண்டால் மின்கம்பத்திற்கு மின்சாரம் வராமல் அல்லது மின்சாரம் இல்லாத போது மெயின் சுவிட்சை ஆஃப் செய்து வைத்து மின்வாரியத்திற்கு உதவி உயிர் பலியினை தடுப்பது நமது கடமை.

UPS சப்ளைக்கு காமன் நியூட்ரலை பயன்படுத்துவது தான் பொதுவாகப் புழக்கத்தில் இருக்கிறது. UPS சப்ளைக்கு தனி நியூட்ரலை பயன்படுத்த வேண்டுமாயின், UPS ஃபீடிங் சர்கூட்டின் நியூட்ரலையும்,
பேஸ் மாதிரியே தனியாகப் பிரித்து, UPS இன் பேஸ், நியூட்ரலுக்குமாகத் தனியாக ஒரு காண்டேக்டர் மூலமாக UPS சர்கூட்டின் சப்ளையை பராமரிப்போமானால், சர்கூட்டின் ஃபேனோ, லைட்டோ பழுதடைந்தால், UPSஇன் பேஸ், வாரியத்தின் நியூட்ரலுக்கு ரிட்டர்ன் சப்ளை போகாது. இது எளிதான காரியமல்ல.
அதற்குப்பதில், RCCB இணைத்தோமானால், யுபிஎஸ் சப்ளை, வாரியத்தின் லைனுக்கு பேக் ஃபீடாகி விபத்து நேர்வதை தடுக்கலாம். இதை கொஞ்சம் மெனக்கெட்டு செய்யனும்.

xiii)முதலில் சொன்னதையே இறுதியிலும் சொல்கிறேன், ELCB ஐ அவசியம் வாங்கிப் பொருத்துங்கள்.

வீட்டின் அனைத்துச் சுவர்களும் ஓதம் காக்கும். குறிப்பாக, மெயின் சுவிட்ச் போர்ட் இருக்குமிடம் சொதசொதன்னு இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஈரம் மின்சாரத்திற்கு நண்பன்.. எனவே, நாம்தான், இந்த கடும் மழைக் காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

கனவு வீடு.சொந்த வீடு கட்டுவது வாழ்நாள் முழுவதும் கனவாகவே போகும் இன்றைய சூழலில் வீடுகட்டி குடியேறினாலே வாழ்நாள் சாதனைதான்...
11/09/2025

கனவு வீடு.

சொந்த வீடு கட்டுவது வாழ்நாள் முழுவதும் கனவாகவே போகும் இன்றைய சூழலில்
வீடுகட்டி குடியேறினாலே வாழ்நாள் சாதனைதான்.

நடுத்தர, மாதாந்திர சம்பளம் குடும்பங்கள் புதியதாக வீடு கட்டும்போது கச்சிதமாக வீடு கட்டிக் கொள்வது சிறந்தது என்றுதான் பரிந்துரைப்பேன்.
புது வீடு என்றாலே நமக்கு கனவு இல்லம் கட்ட வேண்டும் என்கிற எண்ணம் இருக்குமே தவிர அதை கட்டிய பிறகு வரும் பராமரிப்பு செலவுகளை யோசிக்க மாட்டோம்.

நம்மிடம் இருக்கும் சேமிப்பு, ஹவுசிங் லோன் என்றெல்லாம் செலவழித்து பெரிய வீடாக கட்டி பெருமைப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் ஆஹோ ஓஹோ என வாழ்த்திய பிறகு பெரிய வீடு பராமரிப்பு என்கிற நடைமுறை சிரமம் வரும்போது அய்யயோ என்றாகி விடும்.

பெரிய வீடுகளில் வீட்டு உதவியாளர் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க முடியாது.
அவருக்கு மாதச்சம்பளம், இது போக வீடு முழுக்க லைட்டிங் அலங்காரம், ஏசி வசதிகள், வாட்டர் ஹீட்டர் இதெல்லாம் கரண்ட் பில் பத்தாயிரம் தாண்டும். இதுவே குறைவாகதான் சொல்கிறேன்.
மூன்று வருடங்களுக்கு ஒரு முறையாவது பெயிண்டிங் செய்ய வேண்டும்.
பிளம்பிங் பிட்டிங்ஸ் மற்றும் வீட்டில் தோட்டம் போன்ற கான்செப்ட் இருந்தால் அதற்கு மாதம் சில ஆயிரம் செலவழிக்க வேண்டும். இதெல்லாம் சேர்த்தால் வீட்டின் பராமரிப்பு செலவு மட்டுமே மாதத்திற்கு இருபதாயிரம் குறைந்தது வரும்.
ஒரு நடுத்தர தனி வீட்டின் செலவை மட்டுமே சொல்கிறேன்.

பெரிய பங்களா கதைகள் இதைவிட அதிகமாவே இருக்கும். அதிக வருமானம் இருப்போர்கள் சமாளிக்க கூடும். ஆனால் நடுத்தர குடும்பங்கள் கனவு இல்லம் என்கிற மாயைகளில் சிக்கி விடாதீர்கள்.

குடும்ப உறுப்பினர்களின் வருமானம் மற்றும் தேவைகளை பொறுத்து வீட்டை கச்சிதமாக கட்டிக் கொள்ளுங்கள்.

புதிய வீடு கட்டுவதற்கும்

வீடுகட்ட,
வீட்டு கடன் மற்றும்
ஆலோசனை பெறுவதற்கும் :

9787550101

12/03/2025
11/01/2025
31/12/2024
16/10/2024

Address

2/150 F 5 Srinivasa Nagar
Sivakasi
626124

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when AAA Housing and Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category