30/03/2024
#போலி_ஆவணம்_மற்றும்_மோசடி_ஆவணம்_இரத்து_செய்வது_பற்றிய_சட்டம் ஒரு_பார்வை.
1. போலி ஆவணப்பதிவு தொடர்பாக மாவட்ட பதிவாளர்கள் பதிவு சட்டம் 1908 பிரிவு 77 (A) இன் கீழ் எவ்வாறு விசாரணை செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. கடித எண்: 45633/யு1/2022,நாள்: 04.01.2022.
2. தமிழ்நாடு சட்டம் 41/22 இன் கீழ் போலி ஆவணங்களை ரத்து செய்வது குறித்து தெளிவான அறிவுரைகளும் வழிகாட்டுதலும் பதிவுத்துறை தலைவர் அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை எண்: 33760/யு1/2022,நாள்: 27.09.2022.
3. பதிவுச் சட்டப்பிரிவு 22(ஏ) மற்றும் 22(பி) க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுச் சட்டப்பிரிவு 77(ஏ) இன் கீழ் மாவட்ட பதிவாளர்கள் விசாரணையில் கண்டறிந்தால் அதனை இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். போலி ஆவணம் என்ற தெரிந்த பின்னரும் பதிவு சட்டப்பிரிவு 68(2) கீழ் அதை தவிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்வு காண உத்தரவு பிறப்பிக்க கூடாது. மேலும் 16.08.2022 க்கு பிறகு பெறப்பட்ட மனுக்களை பதிவுச் சட்டப்பிரிவு 77(ஏ) இன் கீழ் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 16.08.2022 க்கு முன்பு மனுக்கள் பெறப்பட்ட மனுக்கள் விசாரணையில் பொலி ஆவணம் என தெரியவந்தால் மனுதாரரிடம் மீண்டும் ஒரு மனுவை பெற்று இரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் அதனை தவிர்த்து பதிவுச் சட்டப்பிரிவு 68(2) இன் கீழ் ஆணை பிறப்பிக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
#ஆதாரம்:
1. வழக் கு எண்: W.P. NO: 33674/2022 and W.M.P. NO: 33130/2022, நாள்: 15.12.2022.
4. மோசடி மற்றும் போலி ஆவணங்களை ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசு சட்ட எண்: 41/2022, பதிவு சட்டம் 1908 பிரிவு 22(பி), 77(ஏ), 77(பி), 81(ஏ) மற்றும் 81(பி) ஐ உட்புகுத்தி திருத்தம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிதழ் மற்றும் மேலும் பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. அரசிதழ் வெளியீடு எண்: 428, நாள்: 16.08.2022.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை கடித எண்: 24819/சி1/2021, நாள்:14.09.2021.
5. ஆவணங்கள் பதிவுக்கு தாக்கல் செய்யும் போது முன் பதிவு அசல் ஆவணம் (முந்தைய ஆவணங்கள்) மற்றும் வில்லசங்க சான்று தாக்கல் செய்யப்படவில்லை என்றால் அந்த பதிவு ஆவணத்தை பதிவு அலுவலர்கள் மறுக்க அதிகாரம் வழங்கி பதிவு சட்டம் 1908 இல் பதிவு விதி 55(ஏ) ஐ உட்புகுத்தி அரசாணை வெளியீடு செய்து அதனை தமிழ்நாடு அரசிதழில் வெளியீட்டு பதிவுத்துறை தலைவர் அவர்களால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. அரசாணை எண்: 129, நாள்:05.09.2022,
2. தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு எண்: 438, நாள்: 05.09.2022,
3. பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை கடித எண்: 22482/சி1/2021, நாள்: 14.09.2022.
6. பதிவு சட்டம் 1908 பிரிவு 68(2) இன் படி விசாரணையில் மோசடி அல்லது போலி ஆவணம் என தெரியவந்தால் போலி ஆவணம் தயாரித்து பதிவு செய்ய உறுதுணையாக இருந்தவர்கள் மீது பதிவு சட்டம் 1908 பிரிவு 83 இன் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மேலும் போலி ஆவணம் தயாரிப்பில் ஈடுபட்ட ஆவண எழுத்தர் மற்றும் வழக்கறிஞரை விசாரணைக்கு உட்படுத்தி உரிய குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு
ஆவண எழுத்தர் உரிமம் விதிமுறைகள் 1982 இன் கீழ் 'பி' மற்றும் 'சி' உரிமமாக இருப்பினும் அதனை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், 'ஏ' உரிமமாக இருப்பின் அதனை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர் சம்பந்தப்பட்ட துணைபதிவுத்துறை தலைவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். வழக்கறிஞராக இருப்பின் அவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட பதிவாளர் வழக்கறிஞர் கழகத்திற்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 68(2) இன் கீழ் சொத்தில் உரிமை குறித்த வழக்குகளை எக்காரணம் கொண்டும் விசாரணைக்கு உட்படுத்த கூடாது என்று பதிவு துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையில் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. கடித எண்: 41530/யு1/2017,நாள்: 25.03.2022.
2. கடித எண்: 41530/யு1/2017,நாள்: 09.07.2021.
3. கடித எண்: 41530/யு1/2017,நாள்: 31.07.2018.
4. கடித எண்: 41530/யு1/2017,நாள்: 08.11.2017.
7. கடந்த காலங்களில் பதிவுத்துறையில் நடந்த பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்தல் தொடர்பாக அரசு வெளியிட்ட அரசாணை.
#ஆதாரம்:
1. அரசாணை எண்: 174, நாள்: 15.12.2021.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடித எண்: 35084/ஆர் 3/2021, நாள்: 21.09.2021.
8. பதிவுத்துறையில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுதல் வேண்டும் என்று அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
#ஆதாரம்:
1. அரசாணை எண்: 118, நாள்: 29.09.2021.
2. பதிவுத்துறை தலைவரின் கடித எண்: 33912/ஆர் 3/ 2021, நாள்: 14.09.2021.
9. பதிவு சட்டப்பிரிவு 32 (ஏ) இன் கீழ் போலி ஆவணங்களை தடுப்பதற்காக கிரைய ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் புகைப்படம் மற்றும் இடது பெருவிரல் கைரேகை கட்டாயமாக்கப்பட்டதோடு இதர வகை ஆவணங்கள் அடைமானம், குத்தகை, ஏற்பாடு, தானம், உயில் மற்றும் அதிகார ஆவணம் முதலியவனவற்றிற்கும் தாக்கல் செய்பவரின் புகைப்படம் மற்றும் கைரேகை பதிவிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை எண்: 22154/சி1/2006, நாள்: 28.06.2006, 29.06.2006.
10. பதிவுச் சட்டம் பிரிவு 2(1) மற்றும் பதிவு விதி 82(1)&(2) இன் கீழ் ஆவணத்தை எழுதிக் கொடுத்த நபரை அடையாளம் காட்டும் சாட்சிய நபர்களின் பெயர், தந்தை பெயர், மற்றும் முகவரி அடங்கிய அடையாள அட்டையை பதிவு ஆவணத்தில் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை தெளிவாக காட்டுகிறது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை எண்: 44377/சி1/2016, நாள்: 08.12.2016.
11. தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிமம் விதிகள் 1982 விதி 2(டி) கீழ் ஆவண எழுத்தர் சொத்தில் உரிமை குறித்து விசாரணை செய்து எழுத வேண்டும் மற்றும் உரிம விதி 31 இன் படி ஆவணத்தை தயாரித்த ஆவண எழுத்தர் ஆவணத்தின் இறுதி பக்கத்தில் அவருடைய பெயர் உரிமை எண்ணை கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும் இந்த முறை வழக்கறிஞருக்கும் பொருந்தும். ஆவண எழுத்தர் முழு விவரத்தை பதிவு செய்தால் தான் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை எண்: 41530/யு1/2017, நாள்: 08.11.2017 இல் தெரிவிக்கப்பட்டுள்ள படி பதிவு சட்டம் பிரிவு 68(2) இன் கீழ் விசாரணை செய்து போலி ஆவணம் என முடிவு செய்யும்போது அதனை எழுதிய ஆவண எழுத்தரை அடையாளம் கண்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு புகார் அளிக்க ஏதுவாக இருக்கும் என்று பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கையை குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை எண்: 24129/சி1/2021, நாள்: 04.08.2021.
12. ஆவண பதிவின் போது சார்பதிவாளர்கள் நேரடியாக ஆவணதாரர்களிடம் தொடர்பு கொண்டு அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும், இந்நிகழ்வின் போது இடைத்தரகர்கள் தலையீட்டினை தவிர்த்திட அனைத்து நிலை பணியாளர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர், மேலும் அலுவலகத்தில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகின்றனர், பதிவு அலுவலர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர்த்து வேறு எந்த தொகையினையும் வசூல் செய்வது தெரிய வந்தால் உரிய ஒழுங்கு நடவடி எடுக்கப்படும். பொதுமக்கள் எவ்வித தடையயும் இன்றி சேவைபெறும் நிலையை உருவாக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 17772/ஜீ3/2021, நாள்: 11.05.2021.
13. உட்பிரிவு செய்ய தேவை இல்லாத ஆவண பதிவுகளில் தானாக பட்டா மாற்றம் நடைமுறைப்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
#ஆதாரம்:
1. அரசாணை எண் 84, நாள்: 04.02.2020.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 56154/சி1/2018, நாள்: 25.05.2018.
3. பதிவுத்துறை தலைவர் அலுவலக மேல் வரைவு எண்: 1852/சிஎஸ்1/2013, நாள்: 06.01.2021.
4. ஆணையர் நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் நேர்முக கடித எண்: கே8/30417/2019, நாள்: 03.02.2021.
5. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 12446/சி1/2019, நாள்: 08.02.2021.
6. ஆணையர் நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் நேர்முக கடித எண்: கே8/30417/2019, நாள்: 02.03.2021.
7. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 12446/சி1/2019, நாள்: 03.03.2021.
14. ஆவண பதிவின் போது 10 நாட்களுக்குள் பெறப்பட்ட வில்லங்கச் சான்றுடன் ஆவணங்களை தாக்கல் செய்ய கட்டாயமாக்கப்பட்டுள்ளது அவ்வாறு செய்யப்படாத ஆவணங்களில் பதிவு அலுவலர் வில்லங்கச் சான்று கோர்வை செய்ய வேண்டி வலியுறுத்த வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையிலும் உயர்நீதிமன்ற தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 18223/சி1/2013-3, நாள்: 08.11.2013.
2. உயர்நீதிமன்ற வழக்கு எண்:W.P. NO: 674/2020, நாள்: 28.09.2020.
3. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 24011/சி1/2020, நாள்: 08.10.2020.
15. ஆவணப்பதிவின்போது ஆவணதாரர்களின் கைப்பேசி எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 2806/சி/2013, நாள்: 30.01.2013.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 55969/சிஎஸ்1/2013-1, நாள்: 23.01.2018.
3. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 20470/சி1/2020, நாள்: 20.08.2020.
16. ஆவணப்பதிவிற்கு ஆட்சபனை தெரிவித்து தடை மனு அளிப்பது தொடர்பாகவும் அதனை விசாரணை செய்வது தொடர்பாகவும் ஆதாரம் இல்லாத பட்சத்தில் தடை மனைவி நிராகரித்தல் தொடர்பாகவும் பத்திர பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையிலும் செய்தி வெளியீட்டிலும் தெள்ளத் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை க.எண்: 55580/சி1/2004, நாள்: 09.03.2005.
2. பதிவுத்துறை தலைவர் அவர்கள் சுற்றறிக்கை எண்: 33/சி1/2010, நாள்: 15.09.2010.
பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை ந.க.எண்: 39708/சி1/2018, நாள்: 04.10.2018.
17. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண எழுத்தர்கள் மற்றும் நிலத்தரகர்களை அனுமதிக்க கூடாது எனவும் ஆவண எழுத்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் ஆவண எழுத்தர்கள் மீது புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் ஆவண எழுத்தர்கள் ஆவணம் தயாரிப்பதற்கான கட்டண ரசீது கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஆவண எழுத்தர்கள் ரசீது புத்தகம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் பதிவுத் துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் ஆணை எண்: 61349/இ1/06, நாள்: 18.12.2006.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடித எண்: 58779/இ1/09, நாள்: 18.11.2009.
3. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 25-2/எஸ்2/2010, நாள்: 21.06.2010.
4. பதிவு துறை தலைவர் அவர்களின் ஆணை எண்: 61492/எஸ்1/10, நாள்: 19.11.2010.
5. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 50584/எஸ்1/2013, நாள்: 09.12.2013.
6. பதிவுத்துறை தலைவர் அவர்களின் சுற்றறிக்கை எண்: 7513/எஸ்1/2020, நாள்: 25.1.1020.
18. போலி ஆவண பதிவை தடுக்கும் வகையில் ஆவண பதிவின் போது சமர்ப்பிக்கப்படும் முந்தைய ஆவணத்தின் முதல் பக்கத்தில் கையெழுத்துட்டு அதனை பதிவு ஆவணத்தில் கோர்வை செய்ய வேண்டும் என்று அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் அவர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதாரம்:
1. பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை எண்: 25600/சி1/2018, நாள்: 07.06.2018.
2. பதிவுத்துறை தலைவர் அவர்களின் கடித எண்: 25600/சி1/2018, நாள்: 13.06.2018.
வே.நாகராஜன்