Tirupur News1

Tirupur  News1 Tirupur News

23/10/2024

கனமழை பெய்ய இருப்பதை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

15/10/2024

மழை வெள்ள மீட்பு கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு.

திருப்பூர் மாநகராட்சி சார்பில் மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு அதற்கான எண்கள் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மழை நீரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் 0421-2321500 என்ற எண்ணுக்கும்

இலவச அழைப்பு எண் 1800-425-7023 என்ற எண்ணுக்கும் அழைத்து உடனடி உதவிகளை பெறலாம் என அறிவித்துள்ளது.

08/10/2024

சுரங்க பாலத்தில் மழை வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லாமல் இருக்க தீர்வு உள்ளது. அதிகாரிகள் இதை பரிசீலிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

திருமுருகன் பூண்டி சிக்னலில் குடிநீர் குழாய் கேட்வால்வ் குழி ஆழமாக உள்ளது.முன்னாள் செல்லும் வாகனங்களின் பின்னால் இருசக்க...
27/09/2024

திருமுருகன் பூண்டி சிக்னலில் குடிநீர் குழாய் கேட்வால்வ் குழி ஆழமாக உள்ளது.

முன்னாள் செல்லும் வாகனங்களின் பின்னால் இருசக்கரங்கள் வந்தால் இந்தக் குழி இருப்பது தெரியாமல் இதில் சிக்கி தடுமாறி கீழே விழ நேரிடும்.

அந்த சமயத்தில் பின்னால் வரும் வாகனங்கள் சக்கரத்துக்குள் சிக்கி உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இந்த இடத்தில் குழியைச் சுற்றி வெள்ளை கோடுகள் போடுவதுடன் இரவிலும் மிளிரும் எச்சரிக்கை தரைவிளக்கினை பொருத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

திருப்பூர் மாநகர் சாலைகளில் வாய்ப்பு உள்ள இடங்களில் சாலைகளில் நடுவில் செடிகளை நட்டு பசுமை சூழலை வளர்க்கும் நோக்கில் (வனத...
21/09/2024

திருப்பூர் மாநகர் சாலைகளில் வாய்ப்பு உள்ள இடங்களில் சாலைகளில் நடுவில் செடிகளை நட்டு பசுமை சூழலை வளர்க்கும் நோக்கில் (வனத்துக்குள் திருப்பூர்) வெற்றி அமைப்பும் திருப்பூர் மாநகராட்சியும் இணைந்து சாலைகளும் சோலையாகட்டும் எனும் திட்டம் இன்று திருப்பூர் தாராபுரம் சாலை வெள்ளியங்காடு 60 அடி சாலையில் துவங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு..பவன்குமார் G கிரியப்பவனவர் அவர்கள் செடி நட்டி துவங்கி வைத்தார்.

இதில் அருகில் இருக்கும் நாச்சியார் பாடசாலை மாணவ மாணவியர்களும் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.

இவர்களுடன் வனத்துக்குள் திருப்பூர் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களும் கலந்து கொண்டார்கள்.

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur News1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category